Primary tabs

நிகழ்ந்தன.
‘‘அன்னாய் வாழிவேண் டன்னையென் றோழி
பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை
கொன்னே கடவுதி யாயி னென்னதூஉ
மறிய வாகுமோ மற்றே
முறியிணர்க் கோங்கம் பயந்த மாறே’’
(ஐங்குறு. 366)
இஃது இவ்வேறுபாடென்னென்ற
செவிலிக்குத் தோழி பூத்தரு
புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல்.
இது பாலையிற் குறிஞ்சி. இஃது உரிப்பொருளோடு உரிப் பொருண்
மயங்கிற்று. மேல் வருவனவற்றிற்கும் இவ்வாறு உய்த்துணர்ந்து
கொள்க.
‘‘வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழின்
முளைநிரை முறுவ லொருத்தியொடு நெருநற்
குறிநீ செய்தனை யென்ப வலரே
குரவ நீள்சினை யுறையும்
பருவ மாக்குயிற் கௌவையிற் பெரிதே’’
(ஐங்குறு.369)
இது பொழிலிடத்து
ஒருத்தியொடு தங்கிவந்தும் யான் பரத்தையை
அறியேனென்றாற்குத் தோழி கூறியது.
‘‘வண்சினைக் கோங்கின் றண்கமழ் படலை
யிருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப’’
‘‘நீநயந் துறையப் பட்டோள்
யாவ ளோவெம் மறையா தீமே’’
(ஐங்குறு.370)
இது பரத்தையர்க்குப்
பூவணிந்தமை கேட்ட தலைவி
அஃதின்றென்றாற்குக் கூறியது. இவை பாலைக்கண் மருதம் நிகழ்ந்தன.
‘‘அருந்தவ மாற்றியார்’’ (கலி.30)
என்னும் பாலைக்கலியும் அது.
‘‘அன்னை வாழிவேண் டன்னை யுதுக்கா
ணேர்கொடிப் பாசடும்பு பரியவூர் பிழியூஉ
நெய்தன் மயக்கிவந் தன்று நின்மகள்
பூப்போ லுண்கண் மரீஇய
நோய்க்குமருந் தாகிய கொண்கன் றேரே.’’
(ஐங்குறு.101)
இஃது
அறத்தொடுநின்றபின் வரைதற்குப் பிரிந்தான் வரைவொடு
வந்தமை தோழி செவிலிக்குக் காட்டியது. இது நெய்தலிற் குறிஞ்சி.
‘‘கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
யொள்ளிழை யுயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே’’
(ஐங்குறு.122)
‘‘கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
உறாஅ வறுமுலை மடாஅ
வுண்ணாப் பாவை யூட்டு வோளே.’’
(ஐங்குறு.128)
இவை
பெதும்பைப் பருவத்தாள் ஒரு தலைவியொடு வேட்கை
நிகழ்ந்தமையைத் தலைவி
கூறித் தலைவன் குறிப்புணர்ந்தது.
இப்பத்தும் நெய்தற்கண் மருதம்.
‘‘யானெவன் செய்கோ பாணவா னாது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
புல்லென் றனவென் புரிவளைத் தோளே.’’
(ஐங்குறு.133)
இது தலைவன் புறத்துப்