தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2289


பனியேற்ற விரவுப்பன் மலர்தீண்டி
நோய்சேர்ந்த வைகலான் வாடைவந் தலைத்தரூஉம்;

போழ்துள்ளார் துறந்தார்கட் புரிவாடுங் கொள்கையைச்
சூழ்பாங்கே சுடரிழாய் கரப்பென்மற் கைநீவி
வீழ்கதிர் விடுத்தபூ விருந்துண்ணு மிருந்தும்பி
யாழ்கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத்தரூஉம்;

தொடிநிலை நெகிழ்த்தார்கட் டோயுமென் னாருயிர்
வடுநீங்கு கிளவியாய் வலிப்பென்மன் வலிப்பவு
நெடுநிலாத் திறந்துண்ண நிரையிதழ் வாய்விட்ட
கடிமலர் கமழ்நாற்றங் கங்குல்வந் தலைத்தரூஉம்;

இவை மூன்றுந் தாழிசை.

எனவாங்கு, இது தனிச்சொல்.

வருந்தினை வதிந்தநின் வளைநீங்கச் சேய்நாட்டுப்
பிரிந்துசெய் பொருட்பிணி பின்னோக்கா தெய்தி நம்
அருந்துயர் களைஞர் வந்தனர்
திருந்தெயி றிலங்குநின் றேமொழி படர்ந்தே’’   (கலி.29)

இது சுரிதகம்.

இஃது ஒத்தாழிசை.
வந்தாரென ஆற்றுவித்தது.
இதில் வேனிலும் வாடையுங் கங்குலும் மாலையும் வந்தன.

‘‘அம்ம வாழி தோழி சிறியிலைக்
குறுஞ்சினை வேம்பி னறும்பழ முணீஇய
வாவ லுகக்கு மாலையு
மின்றுகொல் காதலர் சென்ற நாட்டே’’    (ஐங்குறு.339)

இவ் ஐங்குறுநூறு பாலைக்கண் மாலை வந்தது.

‘‘தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலுங் கூம்பக்
காலை வரினுங் களைஞரோ விலரோ’’     (ஐங்குறு.183)

பருவ  வரவின்கண் மாலைப்பொழுது கண்டு ஆற்றாளாய தலைவி
தோழிக்குக் கூறியது.

இவ் ஐங்குறுநூறு நெய்தற்கண் மாலை வந்தது.

‘‘தொல்லூழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தாற்
பல்வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போ
லெல்லுறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய
நல்லற நெறிநிறீஇ யுலகாண்ட வரசன்பி
னல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம் போன் மயங்கிரு டலைவர
வெல்லைக்கு வரம்பாய விடும்பைகூர் மருண்மாலை
பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழ
லினிவரி லுயருமற் பழியெனக் கலங்கிய
தனியவ ரிடும்பைகண் டினைதியோ வெம்போல
வினியசெய் தகன்றாரை யுடையை யோநீ’’      (கலி.129)

என   நெய்தற்கலியுட்  கங்குலும்  மாலையும்  முன்பனியும்  வந்தன.
ஒழிந்தனவும் மயங்குமாறு வந்துழிக் காண்க.

கைக்கிளையும் பெருந்திணையும் நான்குநிலத்தும் மயங்குதல்
 

13.
உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே.
 

இஃது எய்தாத தெய்துவித்தது.

(இ-ள்.)  உரிப்பொருள்  அல்லன - உரிப்பொருளென்று ஓதப்படும்
ஐந்திணையும்  அல்லாத   கைக்கிளையும் பெருந்திணையும், மயங்கவும்
பெறும் - நால்வகை நிலத்தும் மயங்கவும்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 22:55:18(இந்திய நேரம்)