தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2326


‘‘அவளே, யுடனம ராயமோ டோரை வேண்டாது
மடமான் பிணையின் மதர்த்த நோக்கமோ
டென்னினு நின்னினுஞ் சிறந்த மென்மொழி
யேதி லாளன் காதலி னானாது
பால்பாற் படுப்பச் சென்றன ளதனான்
முழவிமிழ் பந்தர் வினைபுனை நல்லில்
விழவயர்ந் திருப்பி னல்லதை யினியே
நீயெவ னிரங்குதி யன்னை
யாயினுஞ் சிறந்த நோய்முந் துறத்தே.’’

என்னினும்     நின்னினுஞ்  சிறந்தோன்  தலைவ  னென்று தவிர்தல்
தருமநூல்விதி  என்பது.  இனி   ‘விழவயர்ந்திருப்பினல்லதை’ எனவே
மீட்டற்குச் சேறல் அறனன் றென்று மீட்டாளாயிற்று.

‘‘அன்னை வாழியோ வன்னை நின்மக
ளென்னினும் யாயினு நின்னினுஞ் சிறந்த
தன்னம ரிளந்துணை மருட்டலின் முனாஅது
வென்வேற் புல்லி வேங்கட நெடுவரை
மழையொடு மிடைந்த வயக்களிற் றருஞ்சுரம்
விழைவுடை யுள்ளமோ டுழைவயிற் பிரியாது
வன்கண் செய்து சென்றனள்
புன்கண் செய்தல் புரைவதோ வன்றே.’’

இது தாயை வற்புறுத்தியது.

‘இயல்புற’ என்றதனானே தலைவன் கரணவகையான் வரைந்தானாக
எதிர்சென்ற    தோழிக்கு   யான்   வரைந்தமை   நுமர்க்குணர்த்தல்
வேண்டுமென்றாற்கு  அவள் உணர்த்தினே னென்றலுந் தலைவி மீண்டு
வந்துழி ஊரது நிலைமை கூறுதலுங் கொள்க.

‘‘கருவிரன் மந்திக் கல்லா விளம்பார்ப்பு
இருவெதி ரீர்ங்கழை யேறிச் சிறுகோன்
மதிபுடைப் பதுபோற் றோன்று நாட
வரைந்தனை நீயெனக் கேட்டியா
னுரைத்தனெ னல்லனோ வஃதென் யாய்க்கே’’
                                  
  (ஐங்குறு.280)

‘‘புள்ளு மறியாப் பல்பழம் பழுனி
மடமா னறியாத் தடநீர் நிலைஇச்
சுரநனி யினிய வாகுக வென்று
நினைத்தொறுங் கலுழு மென்னினு
மிகப்பெரிது கலங்கின்று தோழிநம் மூரே.’’  (ஐங்குறு.398)

இன்னும்,  இதனானே செய்யுட்கண் வேறுபட  வருவன  வெல்லாம்
அமைத்துக்கொள்க.

‘‘ஊஉ ரலரெழச் சேரி கல்லென
ஆனா தலைக்கு மறனி லன்னை
தானே யிருக்கத்தன் மனையே யானே
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க
உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு
விண்டொட நிவந்த விலங்குமலைக் கவாஅற்
கரும்புநடு பாத்தி யன்ன
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே.’’       (குறுந்.262)

இது போக்கு நேர்ந்தமை தோழி கூறியது. பிறவுமன்ன.       (39)

கொண்டுதலைக்கழிந்துழிக் கண்டோர் கூற்றுக்கள் நிகழுமாறு
 

40.
பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி
வழுவி னாகிய குற்றங் காட்டலும்
ஊரது சார்வுஞ் செல்லுந் தேயமும்
ஆர்வ நெஞ்ச
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:02:15(இந்திய நேரம்)