தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2335


கலுழ்வகை யெவனே.’’

இவை  தமர் வருவரென ஐயுற்றுக் கூறியன. அவர் வந்து கற்பொடு
புணர்ந்தன வந்துழிக்காண்க.

‘‘அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயிற் பெயர்ந்தநங் காதலர்
வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளனி’’
                                       
(கலி.11)

இதனுள்  ‘என’  வென்றதனாற்  றலைவன் கூற்றுப் பெற்றாம். இது
‘மூன்றன் பகுதி’.

‘‘புகழ்சால் சிறப்பிற் காதலி புலம்பத்
துறந்துவந் தோயே யருந்தொழிற் கட்டூர்
நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை
யுள்ளுதொறுங் கலிழு நெஞ்சம்
வல்லே யெம்மையும் வரவிழைத் தனையே’’ (ஐங்குறு.445)

இது  பகைவயிற் பிரிந்தோன் பருவங்கண்டு தலைவியை நினைந்து
நெஞ்சொடு புலம்பியது.

‘‘முல்லை நாறுங் கூந்தல் கமழ்கொள
நல்ல காண்குவ மாஅ யோயே
பாசறை யருந்தொழி லுதவிநங்
காதனன் னாட்டுப் போதரும் பொழுதே’’   (ஐங்குறு.446)

இது     வேந்தற்குற்றுழிப்  பிரந்தோன்  பருவவரவின்கண் உருவு
வெளிப்பட்டுழிப்          புலம்பியது.           ‘உதவி’யென்றலின்
வேந்தற்குற்றுழியாயிற்று.

‘‘வந்தாற்றான் செல்லாமோ வாரிடையாய் வார்கதிரால்
வெந்தாற்போற் றோன்றுநீள் வேயத்தந் - தந்தார்
தகரக் குழல்புரளத் தாழ்துகில்கை யேந்தி
மகரக் குழைமறித்த நோக்கு’’         (திணைமாலை.77)

இஃது உருவு வெளிப்பாடு. நின்னொடு போதுவே னென்று அவளை
ஆற்றுவித்தது. திணைமாலையிற் பாலை.

‘‘நனிசேய்த் தென்னாது நற்றே ரேறிச்சென்
றிலங்கு நிலவி னிளம்பிறை போலக்
காண்குவெம் தில்லவவள் கவின்பெறு சுடர்நுதல்
விண்ணுய ரரண்பல வௌவிய
மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே’’
                                   (ஐங்குறு.443)

இது  வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன்தான் குறித்த பருவத்து வினை
முடியாமையிற் புலம்பியது.

‘‘தழங்குகுரன் முரசங் காலை யியம்பக்
கடுஞ்சின வேந்தன் றொழிலெதிர்ந் தனனே
மெல்லவன் மருங்கின் முல்லை பூப்பப்
பொங்குபெயற் கனைதுளி காரெதிர்ந் தன்றே
யஞ்சி லோதியை யுள்ளுதொறுந்
துஞ்சா தலமர னாமெதிர்ந் தனமே.’’      (ஐங்குறு.448)

இது  வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் பருவம் வந்துழி மீளப் பெறாது
அரசன்   செய்தியும்  பருவத்தின்  செய்தியுந்  தன்செய்தியுங்  கூறிப்
புலம்பியது.  இப் பாசறைப்  புலம்பல் பத்தனுள்ளும் வேறுபாடு காண்க.
தூதிற் பிரிந்துழிப் புலம்பியன வந்துழிக் காண்க.

‘‘நீடின மென்று கொடுமை தூற்றி
வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந்
தியாம்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:03:55(இந்திய நேரம்)