தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2340


தடமென் றோளி
யஞ்சின ளஞ்சின ளொதுங்கிப்
பஞ்சி மெல்லடி பரல்வடுக் கொளவே.’’

இனி அயலோர் கூற்று நிகழுமாறு:-

‘‘துறந்ததற் கொண்டு துயரடச் சாஅ
யறம்புலந்து பழிக்கு மங்க ணாட்டி
யெவ்வ நெஞ்சிற் கேம மாக
வந்தன ளோநின் மடமகள்
வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே.’’
                                    (ஐங்குறு.393)

செய்யுளியலுட்  ‘பார்ப்பான்  பாங்கன்’  (தொ. பொ. செய். 190)
‘பாணன்  கூந்தன்’  (தொ.  பொ. செய். 191) என்னுஞ் சூத்திரங்களாற்
பார்ப்பான் முதலியோர் கூற்றுக் கூறுமாறு உணர்க.             (42)

முன்னிகழ்ந்தவை பின் தலைவனுந் தலைவியும்
நினைத்தற்கு நிமித்தமாதல்
 

43.
நிகழ்ந்தது நினைத்தற் கேதுவும் ஆகும்.
 

இதுவும் பாலையாவதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.) முன்னர் நிகழ்ந்ததொரு  நிகழ்ச்சி  பின்னர் நினைத்தற்கு
முரிய நிமித்தமாம் எ-று.

என்றது,     முன்னர்த்  தலைவன்கண்  நிகழந்ததொரு  நிகழ்ச்சி
பின்னர்த்  தலைவி நினைத்தற்கும் ஏதுவுமாம். முன்னர்த் தலைவிகண்
நிகழ்ந்ததொரு  நிகழ்ச்சி  பின்னர்த் தலைவன் நினைத்தற்கும் ஏதுவா
மென்றவாறாம்.

உம்மை எச்சவும்மையாதலிற் கூறுதற்குமாம் என்று கொள்க.

உ-ம்:

‘‘நுண்ணெழின் மாமைச் சுணங்கணி யாகந்தங்
கண்ணொடு தொடுத்தென நோக்கியு மமையாரென்
ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவ
ரெண்ணுவ தெவன்கொ லறியே னென்னும்.’’     (கலி.4)

இது,     தலைவன் கண் நிகழ்ந்த மிகுதித் தலையளி வஞ்சமென்று
தலைவி உட்கொண்டு பிரியுங்கொல்லென நினைத்தற்கு நிமித்தமாயிற்று.
இதனானே    தலைவன்    செய்திகளாய்ப்    பின்னர்த்    தலைவி
கூறுவனவற்றிற்கெல்லாம் இதுவே ஓத்தாக அமைத்துக்கொள்க.

இனி,

‘‘அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள்
விளிநிலை கொள்ளாள் தமியள் மென்மெல
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்
குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
கண்ணிய துணரா அளவை யொண்ணுதல்
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையலங் காட்டுப்
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி
மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்
மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப்
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்
விரனுதி சிதைக்கு நிரைநிலை அதர
பரன்முரம் பாகிய பயமில் கானம்
இறப்ப வெண்ணுதி ராயி னறத்தா
றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன வாக என்னுநள் போல
முன்னங்காட்டி முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தெற்றிப்
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ
டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத்
தூநீர் பய
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:04:51(இந்திய நேரம்)