Primary tabs

மந்தியைக் கையிடூஉப் பயிரு
மதிரா யாணர் முதிரத்துக் கிழவ
இவண்விளங்கு சிறப்பி னியல்தேர்க் குமண
இசைமேந் தோன்றிய வண்மையொடு
பகைமேம்
படுகநீ யேந்திய வேலே’’
(புறம்.158)
இஃது இன்னோர் போல எமக்கு ஈ யென்ற இயன்மொழி வாழ்த்து.
‘‘இன்று செலினுந் தருமே சிறுவரை
நின்று செலினுந் தருமே பின்னும்
முன்னே தந்தனெ னென்னாது துன்னி
வைகலுஞ் செலினும் பொய்யல னாகி
யாம்வேண்டி யாங்கெம் வறுங்கல நிறைப்போன்
தான்வேண்டி யாங்குத் தன்னிறை யுவப்ப
வருந்தொழின் முடியரோ திருந்துவேற் கொற்ற
னினமலி கதச்சேக் களனொடு வேண்டினுங்
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
அருங்கலங் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
பிறர்க்கு மன்ன வறத்தகை யன்னே
யன்ன னாகலி னெந்தை யுள்ளடி
முள்ளு நோவ வுறாற்க தில்ல
ஈவோ ரரியவிவ் வுலகத்து
வாழ்வோர் வாழஅவன் றாள்வா ழியவே’’
(புறம்.171)
இது படர்க்கையாகிய இயன்மொழி வாழ்த்து.
‘‘இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிகன் ஆயலன் பிறருஞ்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப்பட் டன்றவன் கைவண் மையே’’
(புறம்.134)
இது
பிறருஞ் சான்றோர் சென்ற
நெறி யென்றமையின்
அயலோரையும் அடுத்தூர்ந்தேத்தியது. இன்னும் வேறுபட
வருவனவெல்லாம்
இதன்கண் அடக்குக.
சேய்வரல்
வருத்தம் வீட
வாயில் காவலற்கு உரைத்த
கடைநிலையானும் - சான்றோர் சேணிடை வருதலாற் பிறந்த
வருத்தந்
தீர வாயில் காக்கின்றவனுக்கு என் வரவினை இசையெனக்
கூறிக்
கடைக்கணின்ற கடைநிலையும்;
இது வாயிலோனுக்குக்
கூறிற்றேனும் அவ்வருத்தந் தீர்க்கும்
பாடாண்தலைவனதே
துறையென்பது பெற்றாம்.
இழிந்தோரெல்லாந்
தத்தம் இயங்களை இயக்கிக் கடைக் கணிற்றல்
‘பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்’
(தொல். பொரு.
புறத்.36) என்புழிக் கூறுதலின், இஃது உயர்ந்தோர்க்கே கூறியதாம்.
உ-ம்:
‘‘வேற்றுச் சுரத்தொடு வேந்தர்கண் வெம்மையு
மாற்றற்கு வந்தனேம் வாயிலோய் - வேற்றார்
திறைமயக்கு முற்றத்துச் சேணோங்கு கோயில்
இறைமகற்கெம் மாற்ற மிசை’’
என வரும்.
‘‘வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்
தாம், முன்னியது முடிக்கு முரனுடை யுள்ளத்து
வரிசைக்கு வருந்துமிப்
பரி

