தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2468


மேற்    காமப்பகுதி   யென்ற  கைக்கிளை  யல்லாத  கைக்கிளையின்
பகுதி     யோடே     வாயுறை     வாழ்த்துஞ்    செவியறிவுறூஉம்
புறநிலைவாழ்த்துங் கூடி நான்காகிய தொகைபெற்ற நான்கும்;

வாயுறை   வாழ்த்து    முதலிய  மூன்றுந் தத்தம்   இலக்கணத்திற்
றிரிவுபடா;     இக்கைக்கிளை திரிவுபடுமென்றற்கு   எண்ணும்மையான்
உடனோதாது         உளப்படவென          வேறுபடுத்தோதினார்.
அகத்திணையியலுள் இருபாற்குங் கூறிய கைக்கிளையுங்,  ‘காமஞ்சாலா
இளமை யோள்வயிற்’
  (தொல்.  பொ.  அகத்.  50)   கைக்கிளையும்,
‘முன்னைய  நான்கும்’ (தொல். பொ. அகத்.52) என்ற  கைக்கிளையும்,
‘காமப்பகுதி’ என்ற கைக்கிளையும், களவியலுண் ‘முன்னைய மூன்றும்’
(தொல்.  பொ.கள.28)  என்ற  கைக்கிளையும் போலாது  எஞ்ஞான்றும்
பெண்பாலார் கூறுதலின்றி இடைநின்ற சான்றோ ராயினும்  பிறராயினுங்
கூறுதற்கு     உரித்தாய்     முற்காலத்து    ஒத்த    அன்பினராகிக்
கடைநிலைக்காலத்து   ஒருவன்  ஒருத்தியைத்  துறந்ததனான்   துறந்த
பெண்பாற்  கைக்கிளையாதலின்  திரிபுடைத்தாயிற்று. இது  முதனிலைக்
காலத்துத் தான்குறித்தது முடித்துப் பின்னர் அவளை   வருத்தஞ்செய்து
இன்பமின்றி யொழிதலான் ஒருதலைக் காமமாயிற்று.

உ-ம்:

‘‘அருளா யாகலோ கொடிதே யிருள்வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்
காரெதிர் கானம் பாடினே மாக
நீனறு நெய்தலிற் பொலிந்த வுண்கண்
கலுழ்ந்துவா ரரிப்பனி பூணக நனைப்ப
வினைத லானா ளாக விளையோய்
கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென
யாந்தற் றொழுதனம் வினவக் காந்தண்
முகைபுரை விரலிற் கண்ணீர் துடையா
யாமவன் கிளைஞரே மல்லேங் கேளினி
யெம்போ லொருத்தி நலனயந் தென்றும்
வரூஉ மென்ப வயங்குபுகழ்ப் பேகன்
ஒல்லென வொலிக்குந் தேரொடு
முல்லை வேலி நல்லூ ரானே’’             (புறம். 144)

இது  கண்ணகி  காரணமாக வையாவிக்கோப்  பெரும்  பேகனைப்
பரணர் பாடிய கைக்கிளை வகைப் பாடாண்பாட்டு.

‘கிளையை     மன்னெங்   கேள்வெய்    யோற்கென’    வினவ,
‘யாங்கிளையல்லேம்  முல்லை  வேலி  நல்லூர்க்கண்ணே  வருமென்று
சொல்வாரெனக்   கூறுதலின்,   அ ஃது   ஏனைக்   கைக்கிளைகளின்
வேறாயிற்று.

‘கன்முழை யருவி’ என்னும் (147) புறப்பாட்டும் அது.

தொக்க நான்கும் உள என  மொழிப  -  அந்நான்கும்  முற்கூறிய
ஆறனோடே தொக்குப் பத்தாய்ப் பாடாண்பகுதிக்கண்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:28:59(இந்திய நேரம்)