Primary tabs

இல்லறமுந் துறவறமுங்
கூறி இந்நிலையாமையானும் பிறவாற்றானும்
வீட்டிற்குக் காரணங் கூறினார். இங்ஙனங் கூறவே, இவ்வாசிரியர்
பெரிதும் பயன் தருவதோர் இலக்கணமே கூறினாராயிற்று, இதனாற்
செய்த புலனெறி வழக்கினை யுணர்ந்தோர் இம்மை மறுமை வழுவாமற்
செம்மை நெறியான் துறை போவராதலின்.
இப்பொருளை எட்டுவகையான்
ஆராய்ந்தாரென்ப. இவை
அகத்திணை புறத்திணையென இரண்டு திணை வகுத்து அதன்கட்
கைக்கிளை முதற் பெருந்திணை யிறுவா யேழும் வெட்சி முதற்
பாடாண்டிணை யிறுவா யேழுமாகப் பதினான்கு பால் வகுத்து,
ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி பரிபாடல் மருட்பா வென அறுவகைச்
செய்யுள் வகுத்து, முல்லை குறிஞ்சி மருதம் நெய்த லென நால்வகை
நிலன் இயற்றிச் சிறுபொழு தாறும் பெரும்பொழு தாறுமாகப்
பனினிரண்டு காலம் வகுத்து, அகத்திணை வழுவேழும் புறத்திணை
வழுவேழுமெனப் பதினான்கு வழுவமைத்து, நாடக வழக்கும் உலகியல்
வழக்குமென இருவகை வழக்கு வகுத்து, வழக்கிடமுஞ்
செய்யுளிடமுமென இரண்டு இடத்தான் ஆராய்ந்தாராதலின். எட்டிறந்த
பல்வகையான் ஆராய்ந்தாரென்பார் முதல் கரு உரியுந், திணைதொறும்
மரீஇய பெயருந், திணைநிலைப் பெயரும், இருவகைக்
கைகோளும்,
பன்னிருவகைக் கூற்றும், பத்துவகைக் கேட்போரும், எட்டுவகை
மெய்ப்பாடும், நால்வகை உவமமும், ஐவகை மரபு மென்பர்.
இனி, இவ்வோத்து
அகத்திணைக்கெல்லாம் பொது இலக்கண
முணர்த்துதலின்
அகத்திணையியலென்னும் பெயர்த்தாயிற்று;
என்னை? எழு