Primary tabs

கை நிலத்திற்கு
ஆசிரியன் தான் படைத்த ஐவகை ஒழுக்கத்திற்
பாலை யொழிந்தனவற்றைப் பகுத்துக் கொடுத்தான், அப் பாலை
ஏனையபோல ஒருபாற் படாது நால்வகை நிலத்திற்கும் உரியதாகப்
புலனெறி வழக்கஞ்செய்து வருதல்பற்றி. பாலைக்கு நடுவணதென்னும்
பெயர் ஆட்சியும் குணனும் காரணமாகப்பெற்ற
பெயர். ‘நடுவு
நிலைத்திணையே நண்பகல் வேனில்’ (9) என ஆள்ப. புணர்தல்,
இருத்தல், இரங்கல், ஊடல் என்பவற்றிற்கு
இடையே பிரிவு
நிகழ்தலானும், நால்வகை யுலகத்திற்கிடையிடையே,
‘‘முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து
நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்.’’
(சிலப். காடு. 54. 56)
என முதற்பொருள் பற்றிப் பாலை நிகழ்தலானும்,
நடுவணதாகிய
நண்பகற் காலந் தனக்குக் காலமாகலானும், புணர்தற்கும் இருத்தற்கும்
இடையே பிரிவு வைத்தலானும், உலகியற்
பொருளான
அறம்பொருளின்பங்களுள் நடுவணதாய பொருட்குத்
தான்
காரணமாகலானும், நடுவணதெனக் குணம் காரணமாயிற்று.
பாயிரத்துள் எல்லை கூறியதன்றி ஈண்டும்
எல்லை கூறினார்,
புறநாட்டிருந்து தமிழ்ச்செய்யுள் செய்வார்க்கும் இதுவே
இலக்கணமாமென்றற்கு.
இவ்விலக்கணம், மக்கள் நுதலிய அகனைந்திணைக்