தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3162


யிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலுங் கூம்புங்
காலை வரினுங் களைஞரோ விலரே.’’     
(ஐங்குறு.183)

என   இவ்  ஐங்குறுநூற்றுள்  இடம்  நியமித்துக்  கூறியது  செய்யுள்
வழக்கு.

இனி, அவை முறையே சிறந்து வருமாறு:-

‘‘முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ
இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற்
பரலவ லடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானங் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானங்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை போதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட்
போதவிழ் அலரின்நாறும்
ஆய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே.’’
  (அகம்.4)

இது குறித்த காலம் வந்ததும், அவரும் வந்தாரென ஆற்றுவித்தது.
இக்  களிற்றியானைநிரையுள்,  முல்லைக்கு  முதலுங்  கருவும்  வந்து
உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது.

‘‘கிளைபா ராட்டும் கடுநடை வயக்களிறு
மு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:39:13(இந்திய நேரம்)