தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3204


ஏணையவும்     வழக்கியலான் நால்வகை நிலத்துஞ் சிறுபாண்மை
வருமேனும்,      பெரும்பான்மை     இவை     உரியவென்றற்குத்
‘திணைக்குரிப்பொருளே’யென்றார்.

உரிமை குணமாதலின் உரிப்பொருள் பண்புத்தொகை.

உ-ம்:

‘‘கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிணர்க் குவளையோ டிடைப்பட விரைஇ
யைதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோண் மேனி
முறியினும் வாயது முயங்கற்கு மினிதே’’     
(குறுந்.62)

இக்குறுந்தொகை புணர்ந்துழி மகிழ்ந்து கூறியது.

‘‘அல்குபட ருழந்த வரிமதர் மழைக்கட்
பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குற்
றிருமணி புரையு மேனி மடவோ
ளியார்மகள் கொல்லிவ டந்தை வாழியர்
துயர முறீஇயின ளெம்மே யகல்வய
லரிவன ரரிந்துந் தருவனர் பெற்றுந்
தண்சேறு தாஅய் மதனுடை நோன்றாட்
கண்போ னெய்தல் போர்விற் பூக்குந்
திண்டேர்ப் பொறையன் றொண்டி
தன்றிறம் பெறுகவிவ ளீன்ற தாயே’’           
(நற்.8)

இந்   நற்றிணையும், ‘‘முலையே   முகிழ்முகிழ்த்  தனவே’’ (337)
என்னுங் குறந்தொகையும் புணர்தனிமித்தம்.

‘‘அன்றவண் ஒழிந்தன்றும் இலையே வந்துநனி
வருந்தினை வாழியெ னெஞ்சே பருந்திருந்
துயாவிளி பயிற்றும் யாஅவுயர் நனந்தலை
உருள்துடி மகுளியின் பொருள்தெரிந் திசைக்குங்
கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம்
எம்மொ டிறத்தலுஞ் செல்லாய் பின்னின்
றொழியச் சூழ்ந்தனை யாயிற் றவிராது
செல்லினிச் சிறக்கநின் னுள்ளம் வல்லே
மறவல் ஓம்புமதி எம்மே நறவின்
சேயிதழ் அனைய வாகிக் குவளை
மாயிதழ் புரையு மலிர்கொள் ஈரிமை
உள்ளகங் கனல உள்ளுதோ றுலறிப்
பழங்கண் கொண்ட கதழ்ந்துவீழ் அவிரறல்
வெய்ய வுகுதர வெரீஇப் பையெனச்
சில்வளை சொரிந்த மெல்லிறை முன்கைப்
பூவீ கொடியிற் புல்லெனப் போகி
யடர்செய் ஆயகல் சுடர்துணை யாக
இய

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:47:13(இந்திய நேரம்)