தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3206


வுநிலைக் கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா வளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிண ரூழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே.’’         
(குறுந்.66)

இது     பருவமன்றென்று வற்புறத்தலின் இருத்தனிமித்த மாயிற்று.
‘‘தேம்படு     சிமய’’    (94)    என்னுங்  களிற்றியானைநிரையும்
இருத்தனிமித்தமாம்,  இக்காலம்  வருந்துணையும்  ஆற்றினா ளெனத்
தான் வருந்துதலின்.

‘‘கானலுங் கழறாது கழியுங் கூறாது
தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியா
தொருநின் னல்லது பிறிதியாதும் இலனே
இருங்கழி மலர்ந்த கண்போ னெய்தல்
கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத்
தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து
பறைவ கிளருந் துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால் அலவ பல்காற்
கைதையம் படுசினை யெவ்வமோ டசாஅங்
கடற்சிறு காக்கை காமர் பெடையொடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து
நின்னுறு விழுமங் களைந்தோள்
தன்னுறு விழுமம் நீந்துமோ வெனவே.’’
     (அகம்.170)

இவ் அகப்பாட்டு நெய்தல். இரங்கலுரிப்பொருட்டாயிற்று.

‘‘ஞாயிறு பட்ட வகல்வாய் வானத்
தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
யிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
விரைகொண் டவையும் விரையுமாற் செலவே’’
(குறுந்.92)

இஃது இரங்கனிமித்தம்.

‘‘தருக்கேம் பெருமநின் னல்கல் விருப்புற்றுத்
தாழ்ந்தாய்போல் வந்து தகவில செய்யாது
சூழ்ந்தவை செய்துமற் றெம்மையு முள்ளுவாய்
வீழ்ந்தார் விருப்பற்றக் கால்’’              
(கலி.69)

இஃது ஊடல்.

‘‘பரியுடை நன்மான் பொங்குளை யன்ன
வடைகரை வேழம் வெண்பூப் பக
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:47:37(இந்திய நேரம்)