தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3208


தோள் விளங்க வீசி
வல்லுவை மன்னால் நடையே கள்வர்
பகைமிகு கவலைச் சென்னெறி காண்மார்
மிசைமரஞ் சேர்த்திய கவைமுறி யாஅத்து
நாரரை மருங்கின் நீர்வரப் பொளித்துக்
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீமூட் டாகுந்
துன்புறு தகுந ஆங்கண் புன்கோட்டு
அரிலிவர் புற்றத் தல்கிரை நசைஇ
வெள்ளரா மிளிர வாங்கும்
பிள்ளை யெண்கின் மலைவயி னானே’’    
(அகம்.257)

இது     கொண்டு தலைக்கழிதற்கண் தலைவன் தலைவி நடையை
வியந்தது.   இஃது   அகம்.  ‘‘அழிவிலர்  முயலும்  (நற்.9)  என்பது
பாலைக்கட் புணர்ச்சி நிகழ்ந்தது.

இனித்     தலைவி     பிரிந்திருந்து    மிகவும்   இரங்குதலின்
‘இரங்கினு’மெனச் சூத்திரஞ்செய்து, அதனானே பாலைப் பொருட் கண்
இரங்கற் பொருள் நிகழுமென்றார்.

உ-ம்:

‘‘ஓங்குமலைச் சிலம்பிற் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன
ஊன்பொதி யவிழாக் கோட்டுகிர்க் குருளை
மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப்
பொறிகிள ருழுவைப் பேழ்வா யேற்றை
யறுகோட் டுழைமான் ஆண்குர லோர்க்கும்
நெறிபடு கவலைய நிரம்பா நீளிடை
வெள்ளி வீதியைப் போல நன்றுஞ்
செலவயர்ந் திசினால் யானே பலபுலந்
துண்ணா வுயக்கமோ டுயிர்செலச் சாஅய்த்
தோளுந் தொல்கவின் றொலைய நாளும்
பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கி
மருந்துபிறி தின்மையின் இருந்தும்வினை யிலனே’’
 
                                    (அகம்.147)

இதனுள்     வெள்ளிவீதியைப்  போலச்  செல்லத் துணிந்த யான்
பலவற்றிற்கும்    புலந்திருந்து    பிரிந்தோரிடத்தினின்றும்   பிரிந்த
பெயர்வுக்குத்  தோணலந்  தொலைய  உயிர்செலச்  சாஅய் இரங்கிப்
பிறிது மருந்தின்மையிற் செயலற்றேனென மிகவும் இரங்கியவாறு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:48:00(இந்திய நேரம்)