தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3269


குரல் வெவ்வளி யெடுப்ப நிழல்தப
வுலவை யாகிய மரத்த
கல்பிறங்கு மாமலை யும்பரஃதெனவே.’’
         (நற்.62)

இது  நற்றிணை. இவை தலைவிகண் நிகழ்ந்தனவும் அவடன்மையும்
பின்னர்த்  தலவைன்  நினைந்து செலவழுங்குதற்கு நிமித்த மாயவாறு
காண்க. ‘‘அறியாய் வாழி  தோழி  யிருளற’’  (அகம்.53)  என்பது
தலைவன்கண்  நிகழ்ந்தது  தலைவி  நினைந்து  தோழிக்குக் கூறியது.
‘நெஞ்சு நடுக்குற’’ என்னும் பாலைக்கலியும் (23) அது.

‘‘உறலியா மொளிவாட வுயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யவரொடும் விளையாடு வான்மன்னோ
பெறலரும் பொழுதொடு பிறங்கிணர்த் துருத்திசூழ்ந்
தறலாரும் வையையென் றறைகுந ருளராயின்.’’
  (கலி.30)

இதுவும் அது.

‘‘ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினை
பொரியரை வேம்பின் புள்ளி நீழற்
கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
வில்லே ருழவர் வெம்முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த வுரன்மாய் மாலை
யுள்ளினெ னல்லனோ யானே யுள்ளிய
வினைமுடித் தன்ன வினியோண்
மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே.’’
     (நற்.3)

என்னும்     நற்றிணையும்     அது.     இவ்வாறன்றி     வேறுபட
வருவனவெல்லாம் இதனான் அமைக்க.                       (43)

தலைவியும் தோழியும் தலைவன்கண் நிகழ்ந்த கூற்றைக்
கூறிநிற்றலும் பாலையே ஆதல்
 

44.
நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே.
 

இஃது ‘ஒன்றாத் தமரினும்’ (தொல். பொ.  அகத்.  41)  என்னுஞ்
சூத்திரத்திற்கொரு புறனடை கூறுகின்றது.

(இ-ள்.)  நிகழ்ந்தது கூறி. ஒன்றாத்தமரினும் என்னுஞ் சூத்திரத்துத்
தலைவன்கண்  நிகழ்ந்த  கூற்றினைத்  தலைவியுந்  தோழியுங்  கூறி,
நிலையலுந்  திணையே.  அதன்கண்  நிலைபெற்று  நிற்றலும் பாலைத்
திணையாம் எ-று.

உ-ம்:

‘‘அரும்பொருள் வேட்கையி னுள்ளந் துரப்பப்
பிரிந்துறை சூழாதி யைய விரும்பிநீ
யென்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின்
மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண்
சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது
ஒழிந்தவ ரெல்லாரு முண்ணாதுஞ் செல்லா
ரிளமையுங் காமமு மோராங்குப் பொற்றார்
வளமை விழைதக்க துண்டோ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:59:32(இந்திய நேரம்)