தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3272


காய்சின யானை கங்குல் சூழ
அஞ்சுவர விறுத்த தானை
வெஞ்சின வேந்தன் பாசறை யோரே’’      
(அகம்.264)

இது  தலைவன் பாசறைப் புலம்பினமை கூறக்கேட்ட தலைவி ‘‘நம்
நிலை    அறியாராயினும்’’
   எனக்   கூறினாள்.   ‘‘திசை  திசை
தேனார்க்குந்   திருமருத  முன்றுறை’’
  என்பது  (கலி.26)   காவற்
பாங்கின்கட் டலைவன்  கூறியது  கேட்ட  தலைவி  கூறியது.  பிறவும்
வருவனவெல்லாம் இதனான் அமைக்க.                       (44)

மரபு திரியாமல் சில பொருள்கள் திணைகளிடை விரவுதல்
 

45.
மரபுநிலை திரியா மாட்சிய வாகி
விரவும் பொருளும் விரவும் என்ப.
 

இது மரபியலுட்  கூறப்படும்   மரபன்றி   அகத்திணைக்கு  உரிய
மரபுகள் கூறுகின்றது.

(இ-ள்.)  மரபுநிலை  திரியா  மாட்சிய ஆகி - புலனெறி வழக்கஞ்
செய்துவருகின்ற  வரலாற்று  முறைமை திரியாத மாட்சியவாகி; விரவும்
பொருளும் விரவும் என்ப - பாலைத் திணைக்குங் கைக்கிளை பெருந்
திணைக்கும்  உரியவாய்  விரவும்  பொருளும்  ஏனைத் திணைக்கும்
உரியவாய்  விரவும்  பொருளும்  விரவி  வருமென்று கூறுவர் புலவர்
எ-று.

அவை  தலைவி  ஆற்றாமை கண்டுழிப் பிரிந்த தலைவன் மீண்டு
வந்தானெனத்  தோழி கூறுவனவும், வரைவிடை வைத்துப் பிரிந்தோன்
தலைவியை   நினைந்து  வருந்திக்  கூறுவனவும்,  உடன்  போயவழி
இடைச்சுரத்து நிகழ்ந்ததனை மீண்டும் வந்துழித் தலைவன் றோழிக்குக்
கூறுவனவும்,  யானினைத்த  வெல்லை  யெல்லாம்  பொருள் முடித்து
வாராது   நின்னல   நயந்து   வந்தேனெனத்   தலைவன்   கூறலும்,
பொருள்வயிற்  பிரிந்தோன்  தலைவியை  நினைந்து  வருந்துவனவும்,
இடைச்சுரத்துத்  தலைவன்  செலவு  கண்டோர்  கூறுவனவும், அவன்
மீட்சி  கண்டோர்  கூறுவனவும்,  ஊரின்கட்  கண்டோர் கூறுவனவும்
பிறவுமாம். அவை பாலைத் திணைக்கு விரவும் பொருளாமென்றுணர்க.

உ-ம்:

‘‘கோடுயர் பன்மலை யிறந்தன ராயினு
நீட விடுமோ மற்றே நீடுநினைந்து
துடைத்தொறுந் துடைத்தொறுங் கலங்கி
யுடைத்தரும் வெள்ள மாகிய கண்ணே’’
    (ஐங்குறு.358)

இவ் வைங்குறுநூறு   தலைவன்   மீண்டானென்றது. ‘‘பாடின்றிப்
பசந்தகண்’’
(பாலைக்கலி.16) என்பதும் அது.

‘‘வளைபடு முத்தம் பரதவர் பகருங்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:00:08(இந்திய நேரம்)