தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3286


மேவினு மேவாக் கடையு மவையெல்லா
நீயறிதி யானஃதறிகல்லேன் பூவமன்ற
மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய் நின்னையான்
புல்லினி தாகலிற் புல்லினெ னெல்லா
தமக்கினி தென்று வலிதிற் பிறர்கின்னா
செய்வது நன்றாமோ மற்று.’’
                  (கலி.62)

இது மிக்க காமத்துமிடல்.

‘செப்பிய     நான்’  கெனவே,   செப்பாதனவாய்   அத்துணைக்
கந்தருவமாகக்கூறுகின்ற ‘‘பின்னர் நான்கும் பெருந்திணை பெறும்’’
(தொல்.  பொ.  கள.  14) என்ற பெருந்திணையும் நான்கு உளவென்று
உணர்க.    ‘குறிப்பெ’ன்றதனான்   அந்நான்கும்   பெருந்திணைக்குச்
சிறந்தனவெனவும்,   ஈண்டுக்   கூறியன   கைக்கிளைக்குச்  சிறந்தன
வெனவுங் கொள்க.                                       (51)

இயற்கைப்புணர்ச்சிக்கு முன் நிகழும் கைக்கிளை இவையெனல்
 

52.
முன்னைய நான்கும் முன்னதற் கென்ப.
 

இது ‘முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே’ (தொல். பொ.
கள.   14.)   எனக்  களவியலுட்  கூறுஞ்  சிறப்பில்லாக்  கைக்கிளை
போலன்றிக்  காமஞ்  சாலா  இளமையோள்வயிற்  கைக்கிளை  போல
இவையுஞ் சிறந்தன என, எய்தாதது எய்துவித்தது.

(இ-ள்.)  இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னிகழ்ந்த காட்சியும் ஐயமுந்
தெரிதலும்  தேறலும்   என்ற   குறிப்பு   நான்கும்   நற்காமத்துக்கு
இன்றியமையாது வருதலின், முற்கூறிய சிறப்புடைக் கைக்கிளையாதற்கு
உரியவென்று கூறுவர் ஆசிரியர் எ-று.

களவியலுட்     கூறுங்  கைக்கிளை  சிறப்பின்மையின் முன்னதற்
குரியவெனச் சிறப்பெய்துவித்தார்.   களவியலுள்  ‘ஒத்த  கிழவனங்
கிழத்தியுங் காண்ப’
  (தொல்.   பொ.  கள.  2)  என்றது முதலாக
இந்நான்குங்   கூறுமாறு  ஆண்டுணர்க.  இவை  தலைவி வேட்கைக்
குறிப்புத்  தன்மேனிகழ்வதனைத்  தலைவன் அறிதற்கு முன்னே தன்
காதன்மிகுதியாற்    கூறுவனவாதலிற்    கைக்கிளையாயின.   இவை
தலைவற்கே உரியவென்பது, ‘சிறந்துழி யை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:02:49(இந்திய நேரம்)