தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3313


யிலை யுடையின் சுரையுடை வான்முள்
ளூக நுண்கோற் செறித்த வம்பின்
வலாஅர் வல்விற் குலாவரக் கோலிப்
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலந் தழீஇய வங்குடி சீறூர்க்
குமிழுண் வெள்ளை பகுவாய் பெயர்த்த
வெண்காழ் தாய வண்காற் பந்த
ரிடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
பாணரோ டிருந்த நாணுடை நெடுந்தகை
வலம்படு தானை வேந்தற்
குலந்துழி யுலக்கு நெஞ்சறி துணையே’’       
(புறம்.324)

இது புறம். வேந்தற்குத் துணையாகச் செல்வோரைக் கூறியது.

‘‘இணைப்படைத் தானை யரசோ டுறினுங்
கணைத்தொடை நாணுங் கடுந்துடி யார்ப்பி
னெருத்து வலிய வெறுழ்நோக் கிரலை
மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி
யுருத்த கடுஞ்சினத் தோடா மறவர்’’
            (கலி.15)

எனக் கலி அகத்தும் வந்தது.

‘‘வயங்குமணி பொருத’’ என்னும் (197) அகப்பாட்டினுள்

‘‘சேக்குவங் கொல்லோ நெஞ்சே சாத்தெறிந்
ததர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர்’’
                      (அகம்.167)

எனச்    சாத்தெறிதலும்    அது    -   இங்ஙனம்   பொதுவாதலிற்
பொதுவியலாயிற்று. வேந்தரொடு பொருதலின் வழுவுமாயிற்று.

ஆ   பெயர்த்துத்  தருதலும்.  வெட்சிமறவர் கொண்ட நிரையைக்
குறுநிலமன்னராயினுங்     காட்டகத்து     வாழும்    மறவராயினும்
மீட்டுத்தருதலும்;

உ-ம்:

‘‘ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா
திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த
வல்வின் மறவ ரொடுக்கங் காணாய்
செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ள
முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கு மான்மேற்
புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே’’
    (புறம்.259)

இது குறுநில மன்னர் நிரைமீட்டல் கண்டோர் கூறியது.

‘‘வளரத் தொடினும் வௌவுபு திரிந்து
விளரி யுறுதருந் தீந்தொடை நினையாத்
தளரு நெஞ்சந் தலைஇ மனையோள்
உளருங் கூந்த னோக்கிக் களர
கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
பசிபடு மருங்குலை கசிபுகை தொழாஅக்
காணலென் கொல்லென வினவி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:07:58(இந்திய நேரம்)