Primary tabs

ளர் மரபிற் சூட்டி
நிரையிவட் டந்து’’
எ-று காண்க.
அது அன்றி - அக் கரந்தையே அன்றி;
காட்சி - கல்கெழு சுரத்திற் சென்று கற்காண்டலும், அது
கொணர்ந்து செய்வன செய்து நாட்டிப், பின்னர்க் கற்காண்டலும் என
இருவகையாம்.
உ-ம்:
‘‘தாழி கவிப்பத் தவஞ்செய்வர் மண்ணாக
வாழிய நோற்றனை மால்வரை. யாழிசூழ்
மண்டல மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக்
கண்டனெ னின்மாட்டோர் கல்’’
இது கல் ஆராய்கின்றார் காட்சி.
‘‘ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை
யோங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீ
போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்துப்
பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்லா யினையே கடுமான் றோன்றல்
வானேறு புரையுநின் றாணிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வ மன்றியும் விரிதார்க்
கடும்பகட் டியானை வேந்த
ரொடுங்கா வென்றியு நின்னொடு செலவே’’
(புறம்.265)
இது கோவலர் படலைசூட்ட என்றலிற் கடவுளாகியபின் கண்டது.
‘‘கல்லாயு மேறெதிர்ந்து காண்டற் கெளிவந்த
வல்லான் படலைக்கு வம்மினோ - வெல்புகழாற்
சீரியல் பாடல் சிதையாமல் யாம்பாடத்
தூரிய மெல்லாந் தொட’’
என்பதும் அது.
கால்கோள்
- கல்லுறுத்து இயற்றுதற்குக் கால்கோடலும்,
நாட்டிய
பின்னர் அவன் ஆண்டுவருதற்குக் கால்கோடலும் என இரு
வகையாம்;
உ-ம்:
‘‘வரையறை சூழ்கிடக்கை மாத்தாட் பெருங்கல்
வரையறை செய்யிய வம்மோ வரையறை
வாராப் பெரும்புகழ் வல்வேல் விடலைக்கு
மோராற்றாற் செய்வ துடைத்து’’
இது
‘வரையறை செய்யிய வம்மோ’ என ஒருவனைத் தெய்வமாக
நிறுத்துதற்கு இடங்
கொள்ளப்பட்டமையானும், அவ்விடத்துக்
கால்கோடலானுங் கால்கோள்.
‘‘காப்பு நூல் யாத்துக் கடிகமழ் நீராட்டிப்
பூப்பலி பெய்து புகைகொளீஇ - மீப்படர்ந்த
காளை நடுகற்
சிறப்பயர்ந்து

