Primary tabs

ன்னொருகால் தலைவி தேர்ந்து தெளிவொழித்துக் கூறியவாறு
காண்க.
இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவி கருத்தெல்லாம் உணர்ந்தானா
யினுங்
காவன்மிகுதியானுங்
கரவுள்ளத்தானும் இரண்டாங்
கூட்டத்தினும் அவள்நிலை தெளியாது ஐயுறுதலுங் கூறி, மூன்றாவதாய்
மேல் நிகழும் பாங்கற்கூட்டத்தின் பின்
நிகழும்
இடந்தலைப்பாட்டினும் ஐயுறவு உரித்தென்று
மெய் தொட்டுப் பயிறன்
முதலியன அதற்குங்
கூறினார். அன்றியும் மக்களெல்லாம் முதல்
இடை
கடை யென மூவகைப்படுதலின்
அவர்க்கெல்லாம் இது
பொதுவிதியாகலானும்
அமையும்.
“எண்ணிய தியையா தாங்கொல் கண்ணி
அவ்வுறு மரபி னுகர்ச்சி பெறுகென
வரிவண் டார்க்கும் வாய்புகு கடா அத்த
அண்ணல் யானை யெண்ணருஞ் சோலை
விண்ணுயர் வெற்பினெம் அருளி நின்னின்
அகலி னகலுமெ னுயிரெனத் தவலில்
அருந்துய ரவலமொ டணித்தெம் மிடமெனப்
பிரிந்துறை வமைந்த வெம்புலம்நனி நோக்கிக்
கவர்வுறு நெஞ்சமொடு கவலுங் கொல்லோ
ஆயம் நாப்பண் வருகுவன் கொல்லென
உயவுமென் னுள்ளத் தயர்வுமிக லானே.”
இது வருவான்கொ லென்னும் அச்சமும் வாரான்கொலென்னுங்
காதலுங் கூர்ந்து தலைவி கூறியது.
இனிச் ‘சொல்லிய’ வென்றதனானே இன்னும் இப்புணர்ச்சி கூடுங்
கொலெனக் கூறுவனவும், இன்னும் தெய்வந் தருமெனக் கூறுவனவுந்,
தலைவியை எதிர்ப்பட்ட இடங்கண்டுழி அவளாகக் கூறுவனவுங்,
காட்சிக்கு நிமித்தமாகிய கிள்ளையை வாழ்த்து வனவுந், தலைவி
தனித்த நிலைமை கண்டு வியப்பனவும், முன்னர்த் தான் நீங்கிய
வழிப் பிறந்த வருத்தங் கூறுவனவும், அணியணிந்து விடுத்தலும்,
இவைபோல்வன பிறவும் இடந்தலைப்பாட்டிற்குக் கொள்க.
உ-ம்:
“வெள்ள வரம்பி னூழி போகியுங்
கிள்ளை வாழிய பலவே யொள்ளிழை
இரும்பல் கூந்தற் கொடிச்சி
பெருந்தோட் காவல் காட்டி யவ்வே.” (ஐங்குறு.281)
இது கிள்ளை வாழ்த்து.
“நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னுந்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.” (குறள்.1104)
இது நீங்கிய வழிப் பிறந்த வருத்தங் கூறியது.
“அல்குபட ருழந்த வரிமதர் மழைக்கண்
பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குல்
திருமணி புரையு மேனி மடவோள்
யார் மகள் கொல்லிவள் தந்தை வாழியர்
துயர முறீஇயின ளெம்மே ய

