Primary tabs

இதுவும் இரந்து பின்னிற்புழித் தலைவன் கூற்று நிகழுமாறு
கூறுகின்றது.
(இ-ள்.) பண்பிற்
பெயர்ப்பினும் - தோழி தலைவியது இளமை
முதலிய பண்புகூறி அவ்வேட்கையை மீட்பினும்:
உ-ம்:
“குன்றக் குறவன் காதன் மடமகள்
வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி
வளையண் முளைவா ளெயிற்றள்
இளைய ளாயினும் ஆரணங் கினளே.” (ஐங்குறு.256)
இஃது இளையளெனப் பெயர்த்துழித் தலைவன் கூறியது.
பரிவுற்று மெலியினும் - இருவகைக் குறியிடத்துந் தலைவியை
எதிர்ப்படும் ஞான்றும் எதிர்ப்பட்ட ஞான்றும் எதிர்ப்படாநின்ற
ஞான்றும் பலவாயவழி அவன் பரிந்த உள்ளத்தானாய் மெலியினும்:
உ-ம்:
“ஆனா நோயோ டழிபடர் கலங்கிக்
காமம் கைம்மிகக் கையுறு துயரம்
காணவு நல்கா யாயிற் பாணர்
பரிசில் பெற்ற விரியுளை நன்மான்
கவிகுளம்பு பொருத கன்மிசைச் சிறுநெறி
இரவலர் மெலியா தேறும் பொறையன்
உரைசா லுயர்வரைக் கொல்லிக் குடவயின்”
“அகலிலைக் காந்த ளலங்குகுலைப் பாய்ந்து
பறவை யிழைத்த பல்க ணிறாஅல்
தேனுடை நெடுவரைத் தெய்வம் எழுதிய
வினைமாண் பாவை யன்னோள்
கொலைசூழ்ந் தனளா னோகோ யானே.” (நற்.185)
இது பகற்குறியிற் பரிவுற்றது.
“ஓதமு மொலியோ வின்றே ஊதையும்
தாதுளர் கானற் றவ்வென் றன்றே
மணன்மலி மூதூர் அகனெடுந் தெருவில்
கூகைச் சேவல் குராலோ டேறி
யாரிருஞ் சதுக்கத் தஞ்சுவரக் குழறு
மணங்குகால் கிளரு மயங்கிரு ணடுநாட்
பாவை அன்ன பலராய் வனப்பின்
தடமென் பணைத்தோண் மடமிகு குறுமகள்
சுணங்கணி வனமுலை முயங்கல் உள்ளி
மீன்கண் துஞ்சும் பொழுதும்
யான்கண் டுஞ்சேன் யாதுகொ னிலையே.” (நற்.319)
இஃது இரவுக்குறியில் பரிவுற்றது.
“மழைவர வறியா மஞ்ஞை யாலும்
அடுக்க னல்லூர் அசைநடைக் கொடிச்சி
தானெம் மருளா ளாயினும்
யாந்த னுள்ளுபு மறந்தறி யேமே”
(ஐங்குறு.293)
“களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது” (குறள்.1145)
எனவும் வரும்.
இன்னும் ‘பரிவுற்று மெலியினும்’ என்றதனானே புணர்ந்து நீங்குந்
தலைவன் ஆற்றாது கூறுவனவும், வறும்புனங்கண்டு கூறுவனவும்,
இற்செறிப்பறிவுறுப்ப ஆ

