Primary tabs

க்குங் கந்தருவமன்மையானும்
அவற்றின் வேறாகிய
பெருந்திணையாம்.
(14)
பன்னிரண்டனுள் இடையதாய ஐந்தும் இவையெனல்
தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே.
இஃது அப் பன்னிரண்டனுள்
இடையதாய் ஒழிந்த ஐந்துங்
கூறுகின்றது.
(இ-ள்.)
முதலொடு புணர்ந்த யாழோர் மேன-மேற்கூறிய
நடுவணைந்திணையுந் தமக்கு முதலாக அவற்றொடு பொருந்திவருங்
கந்தருவமார்க்கம் ஐந்தும்; தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே -
கெடலருஞ் சிறப்பொடு பொருந்திய ஐவகை நிலனும் பெறுதலின்
அவை ஐந்தெனப்படும் எ-று.
எனவே, முதற்கந்தருவம் ஐந்துமேயன்றி அவற்றொடு பொருத்த
முடைய கந்தருவம் இவ்வைந்துமென வேறுபடுத்தினார். இவை அப்
பன்னிரண்டனுட் கூறாநின்ற ஐந்தும், முதலொடு புணர்ந்தவென்றே
ஒழியாது பின்னும் ‘யாழோர் மேன’ வென்றார், இவையுங் கந்தருவமே
என்றற்கு. இவையும் ஒருவன் ஒருத்தி யெதிர் நின்று உடம்படுத்த
லொப்புமையுடைய. ‘கெடலருஞ் சிறப்’பெனவே முதல் கரு
உரிப்பொருளானுங் களவென்னுங் கைகோளானும் பாங்கி
புணர்த்தலின்மையானும் இலக்கணங் குறைப்பட்டவேனுஞ்,
சுட்டியொருவர் பெயர்கொள்ளப்பட்டுக் கற்பியலாகிய இல்
வாழ்க்கையும் பெற்றுவருதற் சிறப்புடைய இவையும், ஐந்நிலம் பெறு
மென்றானாம். இது புலநெறியன்றி உலகியலாகலின், உலகியலாற்
பாலைநிலனும் ஆண்டு வாழ்வார்க்கு மன்றலும் உளவாகலிற் பாலையுங்
கூறினார். எனவே, ஐம்புலத்து வாழ்வார் மணமுஞ் செய்யுளுட்
பாடியக்கால்
இழுக்கின்றென்றார்.
(15)
தலைவிக்குரிய கிளவிகள் இவையெனல்
இருவகைக் குறிப்பிழைப் பாகிய விடத்தும்
காணா வகையிற் பொழுதுநனி யிகப்பினும்
தானகம் புகாஅன் பெயர்த லின்மையின்
காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி
வேட்கையின் மயங்கிய கையறு பொழுதினும்
புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப்
பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும்
வேளா ணெதிரும் விருந்தின் கண்ணும்
வாளா ணெதிரும் பிரிவி னானும்
நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும்
வரைதல் வேண்டித் தோழி செப்பிய
புரை

