தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3489


‘தம்மூரான்’ என்றலின் ஓதல் முதலிய பிரிவின்றி அணித்தாய வழிப்
பிரிந்தானென அவ்விரண்டும் பயப்பக் கூறியவாறு காண்க.

“சிறுவெண் காக்கைச் செவ்வய்ப் பைந்தோடு
எறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப்
பனிபுலந் துறையும் பல்பூங் கானல்
விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருநம்
இன்னுயி ரல்லது பிறிதொன்று
எவனோ தோழி நாமிழப் பதுவே.”
          (குறுந்.334)

இதுவும் அது.

இவை களவினுட் புலவிப்போலியாம்.

அருமை செய்து அயர்ப்பினும் - முற்கூறிய இட்டுப் பிரிவேயன்றித்
தலைவன் தன்னை அரியனாகச் செய்துகொண்டு தம்மை மறப்பினும்:

அது     தண்டாதிரத்தலை  (தொல்.பொ.102) முனிந்த மற்றையவழித்
தலவன்    தானும்    அரியனாய்மறந்தான்   போன்று   காட்டினும்
அவ்விரண்டுங் கூறுதலாம்.

உ-ம்:

“தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாமறிந் துணர்க வென்ப மாதோ
வழுவப்பிண்ட நாப்ப ணேமுற்
றிருவெதி ரீன்ற வேற்றிலைக் கொழுமுளை
சூன்முதிர் மடப்பிடி நாண்மேய லாரும்
மலைகெழு நாடன் கேண்மை பலவின்
மாச்சினை துறந்த கோண்முதிர் பெரும்பழம்
விடரளை வீழ்ந்துக் காங்குத் தொடர்பறச்
சேணுஞ் சென்றுக் கன்றே யறியா
தேக லடுக்கத் திருண்முகை யிருந்த
குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிரும்
இன்னு மோவா ரென்றிறத் தலரே.”
            (நற்.116)

தீங்கு    செய்தாரையும் பொறுக்கிற்பார் நம்மைத் துறத்தலின் நாம்
அரியேமாகியது    பற்றித்   தாமும்   அரியராயினார்   போலுமென
அவ்விரண்டுங் கூறினாள்.

“நெய்தற் படப்பை னிறைகழித் தண்சேர்ப்பன்
கைதைசூழ் கானலிற் கண்டநாட் போலானாற்”
செய்த குறியும்பொய் யாயினவாற் சேயிழாய்
ஐயகொ லான்றார் தொடர்பு.”          
(திணை.ஐம்.41)

இதுவும் அது.

வந்தவழி     எள்ளினும் - பெரிதாகிய இடையீட்டினுள் அரிதாகத்
தலைவன்  வந்தஞான்றும்  பெறாதஞான்றைத் துன்பமிகுதியாற் பெற்ற
தனையுங் கனவு போன்றுகொண்டு இகழ்ந்திருப்பினும்:

உ-ம்:

“மானடி யன்ன கவட்டிலை யடும்பின்
தார்மணி யன்ன வொண்பூக் கொழுதி
ஓண்டொடி மகளிர் வண்ட லயரும்
புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை
யுள்ளேன் றோழி படீஇயரென் கண்ணே”
     (குறுந்.243)

“வாராக்காற் றுஞ்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:41:26(இந்திய நேரம்)