Primary tabs

டர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே” (குறுந்.87)
“மென்றினை மேய்ந்த சிறுகட் பன்றி
வன்க லடுக்கத்துத் துஞ்சு நாடன்
எந்தை யறித லஞ்சிக்கொல்
அதுவே தெய்ய வாரா மையே” (ஐங்குறு.261)
“புனையிழை நோக்கியும் புனலாடப் புறஞ்சூழ்ந்தும்
மணிவரி தைஇயும்நம் மில்வந்து வணங்கியும்
நினையுபு வருந்துமிந் நெடுந்தகை திறத்திவ்வூர்
இளையளென் றெடுத்தோதற் கனையையோ நீயென
வினவுதி யாயின் விளங்கிழாய் கேளினி;
செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்றா யென்றவன்
பௌவநீர்ச் சாய்க்கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ
கௌவைநோ யுற்றவர் காணாது கடுத்தசொல்
ஒவ்வாவென் றுணராய்நீ யொருநிலையே யுரைத்ததை;
ஒடுங்கியாம் புகலொல்லேம் பெயர்தர வவன்கண்டு
நெடுங்கய மலர்வாங்கி நெறித்துத்தந் தனைத்தற்கோ
விடுந்தவர் விரகின்றி யெடுத்தசொற் பொய்யாகக்
கடிந்தது மிலையாய்நீ கழறிய வந்ததை;
வரிதேற்றாய் நீயென வணங்கிறை யவன்பற்றித்
தெரிவேய்த்தோட் கரும்பெழுதித் தொய்யில்
செய்தனைத்தற்கோ
புரிபுநம் மாயத்தார் பொய்யாக வெடுத்த சொல்
உரி தென வுணராய்நீ யுலமந்தாய் போன்றதை; எனவாங்கு,
அரிதினி யாயிழா யதுதேற்றல் புரிபொருங்கு
அன்று நம் வதுவையு ணமர்செய்வ தின்றீங்கே
தானயந் திருந்ததிவ் வூராயின் எவன்கொலோ
நாஞ்செயற் பால
தினி“ (கலி.76)
எனவரும்.
பிரிந்தவழிக் கலங்கினும் - களவு அலராகாமல் யான் பிரிந்துழித்
தலைவி கலங்குவளென்று அஞ்சித் தலைவன் பிரியாது உறைதலிற்
பிரிவைக் கருதப் பெறாத தலைவி அவ்வாறன்றிப் பிரிந்துழிக்
கலங்கினும்:
உ-ம்:
“மின்னுச் செய் கருவிய பெயன்மழை தூங்க
விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப்
பொலம்படைப் பொலிந்த வெண்டே ரேறிக்
கலங்குகடற் றுவலை யாழி நனைப்ப
இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன்
யாங்கறிந் தன்றுகொல் தோழியென்
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே” (குறுந்.205)
“குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ
வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக்
கண்களி பெறூஉங் கவின்பெறு காலை
எல்வளை ஞெகிழ்த்தோர்க் கல்லல் உறீஇயர்
சென்ற நெஞ்சஞ் செய்வினைக் குசாவாய்
ஒருங்குவர னசையொடு வருந்துங் கொல்லோ
அருளா னாதலி னழிந்திவண் வந்து
தொன்னல னிழந்தவென் பொன்னிறம் நோக்கி
யேதி லாட்டி யிவளெனப்
போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே” (நற்.56)
“வருவது கொல்லோ தானே வாராது
அவணுறை மேவலி னமைவது கொல்லோ
புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை
இருவி யிருந்த குருவி வெருவுறப்
பந்தாடு மகளிரிற் படர்தரும்
குன்றுகெழு நாடனொடு சென்றவென் னெஞ்சே”
(ஐங்குறு.295)
“பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை
வரிப்புற வார்மணன்மே லேறித் - தெரிப்புறத்
தா

