தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3508


கூறியது.

“பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக்
கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர்
வெருக்குப்பல் லுருவின் முல்லையொடு கஞல
வாடை வந்ததன் தலையும் நோய்பொரக்
கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக்
கடலாழ் கலத்திற் றோன்றி
மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே.”
     (குறுந்.240)

இது பருவங்கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறியது.

“நோயுங் கைம்மிகப் பெரிதே மெய்யுந்
தீயுமிழ் தெறலின் வெய்தா கின்றே
பொய்யெனச் சிறிதாங் குயிரியர் பையென
முன்றிற் கொளினேர் நந்துவள் பெரிதென
நிரைய நெஞ்சத் தன்னைக் குய்த்தாண்
டுரையினி வாழி தோழி புரையின்
உண்ணேர் எல்வளை ஞெகிழ்த்தோன் குன்றத்
தண்ணல் நெடுவரை யாடித் தண்ணென
வியலறை மூழ்கிய வளியென்
பசலை யாகந் தீண்டிய சிறிதே.”
              (நற்.236)

இது  வரைவிடை ஆற்றாமை  மிக்குழி  அவன்வரையின்  முள்கிய
காற்று என் மெய்க்கட்படினும் ஆற்றலா மென்றது.

“அம்ம வாழி தோழி யவர்போல்
நம்முடைய வாழ்க்கை மறந்தன்று கொல்லோ
மனையெறி யுலக்கையின் தினைகிளி கடியுங்
கான நாடன் பிரிந்தெனத்
தானும் பிரிந்தன்றென் மாமைக் கவினே.”

இது வன்புறை யெதிரழிந்தது.

“சிறுபுன்மாலை சிறுபுன் மாலை
தீப்பனிப் பன்ன தண்வளி யசைஇச்
செக்கர் கொண்ட சிறுபுன் மாலை
வைகலும் வருதியா லெமக்கே
ஒன்றுஞ் சொல்லாயவர் குன்றகெழு நாட்டே.”

இது மாலைப்பொழுது கண்டு வருந்திக் கூறியது.

இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக.

“கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனெனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே.”
         (குறுந்.30)

இது  வரைதற்குப்  பிரிய  வருந்துகின்றது  என்னென்றாட்குக்  கனவு
நலிவுரைத்தது.

“ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை யவ்வளி குழலிசை யாகப்
பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுர லாகக்
கணக்கலை யிகுக்குங் கடுங்குரல் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டியா ழாக
இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத் தியலியா டும்மயில்
விழவுக்கள விறலியின் தோன்று நாடன்
உருவ வல்விற்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:45:06(இந்திய நேரம்)