Primary tabs

ந்த
பின்னல்லது தலைவிமாட்டுத் தோழி சொன்னிகழ்த்தாளென்றற்குப்
‘பின்றை’ யென்றார்.
உ-ம்:
“காம்பிவர் தோளுங் கருமதர் மழைக்கணும்
வீங்கிள முலையும் வேறுபட் டனவே
தாங்கரு நாற்றந் தலைத்தலை சிறந்து
பூங்கொடிக் கிவர்ந்த புகற்சியென வாங்கிற்
பகலும் கங்குலு மகலா தொழுகுமே
நன்றி யளவைத் தன்றிது
எவன்கொன் மற்றிவட் கெய்திய வாறே.”
இதனுள் நாற்றமுந் தோற்றமுஞ் செலவும் வந்தன.
“கண்ணுஞ் சேயரி பரந்தன்று நுதலும்
நுண்வியர் பொறித்து வண்டார்க் கும்மே
வாங்கமை மென்றோண் மடந்தை
யாங்கா யினள்கொ லென்னுமென் நெஞ்சே.”
(சிற்றெட்டகம்)
“தெய்வத்தி னாயதுகொல் தெண்ணீர் புடையுடுத்த
வையத்து மக்களின் ஆயதுகொல் - நைவுற்று
வண்டார்பூங் கோதை வரிவளைக்கை வாணுதலாள்
பண்டைய ளல்லள் படி.”
இவையும் அவை.
“ஏனல் காவ லிவளும் அல்லள்
மான்வழி வருகுவன் இவனும் அல்லன்
நரந்தங் கண்ணி யிவனோ டிவளிடைக்
கரந்த வுள்ளமொடு கருதியது பிறிதே
எம்முன் நாணுநர் போலத் தம்முள்
மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல
உள்ளத் துள்ளே மகிழ்ப
சொல்லு மாடுப கண்ணி னானே.”
இது புணர்ச்சி உணர்ந்தது.
“இவள்வயிற் செலினே யிவற்குடம்பு வறிதே
இவன்வயிற் செலினே யிவட்கு மற்றே
காக்கை யிருகணி னொருமணி போலக்
குன்றுகெழு நாடற்குங் கொடிச்சிக்கும்
ஒன்றுபோல் மன்னிய சென்றுவாழ் உயிரே.”
இதுவும் அது.
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்
பொருள் நாட்டத்தானும் - அங்ஙனம் உணர்ந்தபின் தோழி
தலைவியுடன் ஆராயுங்காற் றன்மனத்து நிகழ்ந்தனவற்றை மறைத்துக்
கூறவேண்டுதலில் உண்மைப் பொருளானும் பொய்ப் பொருளானும்
விராவிவரினும் அவட்குக் குற்றேவல் செய்யுந் தன்மையின்
தப்பாதவாற்றான் வேறுபல் கவர்பொருள் படக்கூறி ஆராயும்
ஆராய்ச்சிக்கண்ணும்:
நாணான் இறந்து படாமற் கூறுதற்கு ‘வழிநிலை பிழையாது’ என்றார்.
பிறைதொழுவா
மெனவுங், கணைகுளித்த புண்கூர் யானை
கண்டனெனெனவும், தன் பெருமைக்கு ஏலாத சிறு சொற்

