தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3549


ல் லாகம்
வாழியெம் மகளை யுரைமதி இம்மலைத்
தேம்பொதி கிளவியென் பேதை
யாங்கா டினளோ நின்னொடு பகலே.”

என வரும்.

இது செவிலி தோழியை வினாயது.

“ஓங்குமலை நாட வொழிகநின் வாய்மை
காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி
உறுபகை பேணா திரவின் வந்திவள்
பொறிகிள ராகம் புல்ல தோள்சேர்
பறுகாற் பறவை யளவில மொய்த்தலின்
கண்கோ ளாக நோக்கிப் பண்டு
மினையை யோவென வினவினள் யாயே
யதனெதிர் சொல்லா ளாகி அல்லாந்
தென்முக நோக்கி யோளே யன்னா
யாங்குணர்ந்த துய்குவள் கொல்லென மடுத்த
சாந்த ஞெகிழி காட்டி
யீங்கா யினவா லென்றிசின் யானே.”
           (நற்.55)

இது, செவிலி வினாயினமையைத் தோழி கொண்டு கூறினாள்.

தெய்வம்    வாழ்த்தலும் - இன்னதொன்று நிகழ்ந்ததெனத் துணிந்த
பின்னர்த் தன் மகளொடு தலைமகனிடை நிகழ்ந்த ஒழுக்கம் நன்னர்த்
தாகவெனத் தெய்வத்திற்குப் பராவுதலும்:

உ-ம்:

“பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய
செறிபடை யம்பின் வல்விற் கானவன்
பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு
நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்
கண்பொரு திமைக்குந் திருமணி கிளர்ப்ப
வைந்நுதி வான்மருப் பொடிய வுக்க
தெண்ணீர் ஆலி கடுக்கு முத்தமொடு
மூவேறு தாரமு மொருங்குடன் சாற்றிச்
சாந்தம் பொறைமர மாக நறைநார்
வேங்கைக் கண்ணியன் இழிதரு நாடற்
கின்றீம் பலவி னேர்கெழு செல்வத்
தெந்தையு மெதிர்ந்தனன் கொடையே யலர்வாய்
அம்ப லூரு மவனொடு மொழியும்
சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி
யாயு மவனே யென்னும்யாமும்
வல்லே வருக வரைந்த நாளென
நல்லிறை மெல்விரல் கூப்பி
இல்லுறை கடவுட் கோக்குதும் பலியே.”
       (அகம்.282)

இதனுள்     ‘தோள்பாராட்டி யாயுமவனே என்னும் என்று யாய்
தெய்வம்  பராயினாளென்பதுபடக்  கூறி,  யாம்  அத்தெய்வத்திற்குப்
பலிகொடுத்து மென்றவாறு காண்க:

போக்குடன்   அறிந்தபின் தோழியொடு கெழீஇக் கற்பின் ஆக்கத்து
நிற்றற்கண்ணும்   -   உடன்போக்கு   அறிந்த   பின்னர்ச்  செவிலி
தோழியொடு  மதியுடம்பட்டு  நின்று, தலைவியது கற்புமிகுதியே கருதி
உவந்த உவகைக்கண்ணும்:

அது,

“எம்மணை முந்துறத் தருமோ
தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே”
     (அகம்.195)

என்றாற்போலக் கற்பினாக்கத்துக் கருத்து நிகழ்தல்.

உ-ம்:

“முயங்கு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:53:01(இந்திய நேரம்)