Primary tabs

லைவிக்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்)
தன்வயின் வரூஉம் நன்னய மருங்கின் - தலைவியிடத்தே
தோழிக்குஞ் செவிலிக்கும் வருகின்ற அன்பு மிகுதிக் கண்ணே:
பல்நூறு வகையினும் நாட்டம் வேண்டலில் - பல நூறாகிய
பகுதியானும் ஆக்கமுங் கேடும் ஆராய்தலை அவர் விரும்புதலாலே:
துணைச்சுட்டுக் கிளவி கிழவியாகும் - இவள் ஒரு துணையுடையளென
அவர் சுட்டுதலிடத்துக் கிளக்குங்கிளவி தலைவியதாம்; துணையோர்
கருமம் ஆகலான -
அக்கிளவி அத்தோழியானுஞ் செவிலியானும்
முடியுங்காரியம்
ஆகலான் எ-று.
என்றது,
தோழி ‘பலவேறு கவர்பொருணாட்டம்’ (114) உற்றவழியுஞ்
செவிலி களவு அலராதல் முதலியவற்றான் (115) நாட்டமுற்றவழியுந்
தலைவி அறத்தொடு நிற்குமென்று அறத்தொடு நிலைக்கு இலக்கணங்
கூறியவாறாயிற்று. தோழிக்குத் தலைவி அறத்தொடு நிற்ப, அவள்
செவிலிக்கு அறத்தொடு நிற்ப, அவள் நற்றாய்க்கு அறத்தொடு
நிற்குமென்று உணர்க.
இதனானே பாங்கற்கு உற்றதுரைத்த பின்னர்த்
தலைவன்
உரையாமையும் பெற்றாம். “புனையிழை
நோக்கியும்”
(கலி.76) என்னும் மருதக்கலியுள், “வினவுதியாயின்” என நாட்டம்
நிகழ்ந்தவாறும், அதன் சுரிதகத்துக் கூட்டமுண்மை கூறுதலின்
துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாயவாறுங் காண்க.
“கொடியவுங்
கோட்டவும்” (கலி.54) என்பதன்
சுரிதகத்துச்
செவிலிக்கு உரையாயெனக் கூறியவாறுங்
காண்க.
(32)
களவின்கண்தாயென்று
சிறப்பிக்கப்படுவாள் செவிலி எனல்
தாயெனப் படுவோள் செவிலி யாகும்.
இது முற்கூறிய செவிலி சிறப்புக் கூறுகின்றது.
(இ-ள்) ஆய்பெருஞ் சிறப்பின் - தாய்த் தாய்க்கொண்டு உயிர்
ஒன்றாய் வருகின்றாளென்று ஆராய்ந்து துணிப்பட்ட பெருஞ் சிறப்புக்
காரணமாக; அருமறை கிளத்தலின் - கூறுதற்கரிய மறை
பொருளெல்லாங் குறிப்பானன்றிக் கூற்றாற் கூறத்தக்காளாதலின்;
தாயெனப்படுவோள் செவிலி ஆகும் - தாயென்று சிறப்பித்துச்
சொல்லப்படுவாள் செவிலியேயாம் எ-று.
எனவே ஈன்ற
தாயினுங் களவின்கட் சிறந்தாள் இவளென்றார்.
கற்பிற்கு இருவரும் ஒப்பாராயிற்று. செவிலி சிறந்தமை சான்றோர்
செய்யுளுட் பலருங் கூறியவாறு காண்க.
(33)

