Primary tabs

ன்மேல்
முதிர்பூண் முலைபொருத ஏதிலாள் முச்சி
உதிர்துகள் உக்கநின் ஆடை ஒலிப்ப
எதிர்வளி நின்றாய்நீ செல்;
இனி எல்லாயாந், தீதிலேம் என்று தெளிப்பவுங் கைந்நீவி
யாதொன்றும் எங்கண் மறுத்தர வில்லாயின்
மேதக்க வெந்தை பெயரனை யாங்கொள்வேந்
தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்ம்
ஆபோற் படர்தக நாம்.”
(கலி.81)
எனத் தலைவன் கூறியவாறு காண்க.
காமத்தின்
வலியும் - அவள் அதுனித்து நீங்கியவழி முற்கூறிய
வாறன்றிக் காமஞ் சிறத்தலின் ஆற்றாமைவாயிலாகச் சென்று வலிந்துப்
புக்கு நெருங்கிக்
கூடுமிடத்தும்: தலைவன் கூற்று நிகழும்.
இதுவுந் துனி தீர்ப்பதொரு முறைமை கூறிற்று.
உ-ம்:
“யாரிவ னெங்கூந்தல் கொள்வா னிதுவுமோர்
ஊராண்மைக் கொத்த படியுறுடைத் தெம்மனை
வாரல்நீ வந்தாங்கே மாறு”
(கலி.89)
என வலிந்து சென்றதனைத் தலைவி கூறியவழி,
“ஏஎ, இவை, ஓருயிர்ப் புள்ளின் இருதலை யுள்ளொன்று
போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ கூறினென்
ஆருயிர் நிற்குமா றியாது.”
(கலி.89)
என ஆற்றாமை மிகுதியாற் சென்றமை கூறியவாறு காண்க.
கைவிடின்
அச்சமும் - தலைவி தான் உணர்த்தவும் உணராமல்
தன்னைக் கைவிட்டுப் பிரியில் தான் அவளை நீங்குதற்கு அஞ்சிய
அச்சத்தின்கண்ணும்: தலைவற்குக் கூற்று நிகழும்.
அஃது உணர்ப்புவயின் வாரா வூடலாம்.
“எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி வாழிய நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.”
(குறுந்.19)
இதனுள் அவளையின்றி வருந்துகின்ற நெஞ்சே அவள் நமக்கு
யாரெனப் புலத்தலன்றி ஆண்டுநின்றும் பெயர்தல் கூறாமையிற்
கைவிடின் அச்சமாயிற்று.
தான்
அவட் பிழைத்த நிலையின்கண்ணும் - தலைவன்
தலைவியைப் பிழைத்த பிரிவின்கண்ணும்:
‘பிழைத்த’
வென்றார் ஆசிரியர், இயற்கைப்புணர்ச்சி
தொடங்கிப்
பலகாலும் பிரியேனெனத் தெளிவித்ததனைத்
தப்பலின்.
உ-ம்:
“அன்பும்
மடனுஞ்

