Primary tabs

கிலை யிமைக்கு
மழைமருள் பஃறோன் மாவண் சோழர்
கழைமாய் காவிரிக் கடன்மண்டு பெருந்துறை
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கட லோதம் போல
ஒன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே.”
(அகம்.123)
இது போவேமோ தவிர்வேமோ என்றது.
“அருவி யார்க்கும் பெருவரை யடுக்கத்
தாளி நன்மான் வேட்டெழு கோளுகிர்ப்
பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி
ஏந்துவெண் கோட்டு வயக்களி றிழுக்குந்
துன்னருங் கானம் என்னாய் நீயே
குவளை யுண்கண் இவளீண் டொழிய
வாள்வினைக் ககறி யாயி னின்னொடு
போயின்று கொல்லோ தானே படப்பைக்
கொடுமுள் ஈங்கை நெடுமா வந்தளிர்
நீர்மலி கதழ்பெயல் தலைஇய
ஆய்நிறம் புரையுமிவண் மாமைக் கவினே.”
(நற்.205)
இஃது இவள் நலனழியுமென்று செலவழுங்கியது.
“தேர்செல அழுங்கத் திருவிற் கோலி
ஆர்கலி எழிலி சோர்தொடங் கின்றே
வேந்துவிடு விழுத்தொழில் ஒழிய
யான்றொடங் கினெனா னிற்புறந் தரவே.”
(ஐங்குறு.428)
இஃது ஐயந் தீர்த்தது.
“ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக வெண்ணுதி அவ்வினைக்
கம்மா வரிவையும் வருமோ
எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே.”
(குறுந்.63)
இது தலைவியை வருகின்றாளன்றே எனக் கூறிச் செல வழுங்கியது.
மீட்டு வரவு ஆய்ந்த
வகையின்கண்ணும் - பிரிந்த தலைவன்
இடைச்சுரத்து உருவு
வெளிப்பட்டுழியும் மனம் வேறுபட்டுழியும்
மீண்டு வருதலை ஆராய்ந்த கூறுபாட்டின் கண்ணும்:
“உழையணந் துண்ட விறைவாங் குயர்சினைப்
புல்லரை இரத்திப் பசுங்காய் பொற்பக்
கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம்
பெருங்கா டிறந்தும் எய்தவந் தனவால்
அருஞ்செயல் பொருட்பிணி முன்னி யாமே
சேறு மடந்தை யென்றலின் தான்தன்
நெய்தல் உண்கண் பைதல் கூரப்
பின்னிருங் கூந்தன் மறையினள் பெரிதழிந்
துதியன் மண்டிய வொலிதலை ஞாட்பின்
இம்மென் பெருங்களத் தியவர் ஊதும்
ஆம்பலங் குழலின் ஏங்கிக்
கலங்கஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கே.”
(நற்.113)
இஃது உருவு வெளிப்பட்டுக் கூறியது.
“ஒன்று
தெரி

