Primary tabs

யென முடிக்க. இவற்றுட் பண்ணிக் கொள்ளும்
பகுதியவான, யாம்
மறைந்து சென்று
இவனைக்
கண்ணைப்புதைத்தால்
தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவனென்று உட்கொண்டு
காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண்புதைத்துழித்
தலைவன்
கூறுவனவும், பள்ளியிடத்து வந்திருந்து கூறுவனவும், இவள்
ஊடற்குக்
காரணம் என்னென்று தோழி வினாயவழிக் கூறுவனவும்,
பிரிந்தகாலத்து இவளை மறந்தவா றென்னென்ற தோழிக்குக்
கூறுவனவும், பிறவுமாம்.
உ-ம்:
“சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை யன்ன
நலம்பெறு கையினெங் கண்புதைத் தோயே
பாயல் இன்றுணை யாகிய பணைத்தோள்
தோகை மாட்சிய மடந்தை
நீயலது உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே”
(ஐங்குறு.293)
“தாழிருள் துமிய மின்னித் தண்ணென
வீழுறை யினிய சிதறிஊழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெருவான் யாமே
செய்வினை முடித்த செம்ம லுள்ளமொ
டிவளின் மேவலம் ஆகிக் குவளைக்
குறுந்தாள் நாள்மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே”
(குறுந்.270)
“இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றோனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்”
(குறள்.1315)
“தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீர ராகுதி ரென்று”
(குறள்.1319)
“எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடைச்
சிறிதுகண் படுப்பினுங் காண்குவென் மன்ற
நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர்
வேங்கை வென்ற சுணங்கின்
தேம்பாய் கூந்தன் மாஅ யோளே”
(ஐங்குறு.324)
எனவும் வரும் இன்னும் அதனானே ஊடலைவிரும்பிக்
கூறுவனவுங் கொள்க.
“ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொ லென்று”
(குறள்.1307)
“ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ விரா”
(குறள்.1329)
என வரும். இன்னுங்
கற்பியற்கண் தலைவன்கூற்றாய்
வேறுபடவருஞ் சான்றோர் செய்யுட்களெல்லாம்
இதனான் அமைத்துக்
கொள்க.
(5)
கற்பின்கண்
தலைவிகூற்றுக்கள் நிகழுமிடங்கள் இவை எனல்
ஏற்றற் கண்ணும் நிறு

