Primary tabs

லுநின்
தண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும்
புலத்தகைப் பெண்டிரைத் தேற்றிமற் றியாமெனின்
தோலாமோ நின்பொய் மருண்டு”
(கலி.73)
எனவும் எங்கையரைத் தேற்றெனக் கூறியவாறு காண்க.
செல்லாக்
காலைச் செல்கென விடுத்தலும் - தலைவன் செல்லா
னென்பது இடமுங் காலமும்பற்றி அறிந்தகாலத்து ஊடலுள்ளத்தாற்
கூடப்பொறாதாள் செல்கெனக் கூறி விடுத்து ஆற்று தற்கண்ணும்:
உ-ம்:
“புள்ளிமி ழகல்வயல்” என்னும் மருதக்கலியுள்,
“பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி
நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி
ஆங்கே அவர்வயிற் சென்றி அணிசிதைப்பான்
ஈங்கெம் புதல்வனைத் தந்து.”
(கலி.79)
எனவும்,
“சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
நீர்முது பழனத்து மீனுடன் இரிய
அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
வண்டூது பனிமலர் ஆரும் ஊர
யாரை யோநிற் புலக்கேம் வாருற்
றுறையிறந்து ஒளிருந் தாழிருங் கூந்தல்
பிறளும் ஒருத்தியை எம்மனைத் தந்து
வதுவை யயர்ந்தனை யென்ப அஃதியாங்
கூறேம் வாழிய ரெந்தை செறுநர்
களிறுடை யருஞ்சமந் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்கைச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னவெம்
ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ.”
(அகம்.46)
எனவும் வரும்.
காமக்கிழத்தி
தன்மகத் தழீஇ ஏமுறு
விளையாட்டு இறுதிக்
கண்ணும் - மனையறத்திற்கு உரியளாக வரைந்து கொண்ட காமக்
கிழத்தி, தலைவி புதல்வன் மனைப்புறத்து விளையாடுகின்றவனைத்
தழுவிக்கொண்டு தான் ஏமுறுதற்குக் காரணமான விளையாட்டின்
முடிவின் கண்ணும்:
அவள் எம்மைப்
பாதுகாப்பீரோவென வினாயவழி அவனும்
அதற்கு உடன்பட்டான்போலக் கூறுவன உளவாதலின் ‘ஏமுறு
விளையாட்டு’ என்றார். ‘இறுதி’ யென்றார் விளையாட்டு முடியுந்
துணையுந் தான் மறையநின்று பின்னர்க் கூறுதலின்.
உ-ம்:
“நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி

