Primary tabs

என்றலின் எய்திய திகந்துபடாமற் காத்தது.
(இ-ள்.)
அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின் -
அன்பு
இருவரிடத்தும் நீங்கிய
கடுஞ்சொல் அவ்வாயில்களிடத்துத்
தோன்றுமாகில்;
சிறைப்புறங் குறித்தன்று
என்மனார் புலவர் -
ஒருவர்க்கொருவர்
சிறைப்புறத்தாராகக் கூறல்வேண்டுமென்று
கூறுவர்
புலவர் எ-று.
‘தோன்றி’
னென்பது படைத்துக்கொண்டு கூறுவரென்பதா மாகலின்,
‘குறித்தன்று’
என்பது ‘போயின்று’ என்பது போல
றகரம் ஊர்ந்த
குற்றியலுகரம். “அறியாமையின்”
என்னும் (50) நற்றிணைப் பாட்டும்
உதாரணமாம், அது
சிறைப் புறமாகவுங் கொள்ளக் கிடந்தமையின்.
(38)
தலைவி
தலைவன்கண் தற்புகழ் கிளவி முற்கூறிய
இரண்டிடத்தல்லது
கூறாள் எனல்
எத்திறத் தானுங் கிழத்திக் கில்லை
முற்பட வகுத்த இரண்டலங் கடையே.
இது, தலைவியிலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
தற்புகழ் கிளவி கிழவன்முன் கிளத்தல்
- தன்னைப்
புகழ்ந்துரைத்தலைக் கிழவன் முன்னர்ச் சொல்லுதல்;
எத்திறத்தானுங்
கிழத்திக்கு இல்லை - நனிமிகு சீற்றத்துனியினும் தலைவிக்கு இல்லை.
முற்பட வகுத்த இரண்டலங்கடையே - முன்பு கூறுபடுத்தோதிய
‘தாய்போற் கழறித் தழீஇக் கோடலும்’ (173) ‘அவன் சோர்புகாத்தற்கு
மகன்றா யுயர்பு தன்னுயர் பாதலும்’ (174) அல்லாதவிடத்து எ-று.
கிழத்திக்கில்லையென முடிக்க.
அவ்விரண்டிடத்துந் தனது
குணச்சிறப்பைக் குறிப்பான் தலைவன்முன்னே புகழ்வாள்போல
ஒழுகினாளென்
றுணர்க.
இனி
‘முற்படவகுத்த இரண்டு’ என்பதற்கு
‘இரத்தலுந்
தெளித்தலும்’ (தொல்.அகத்.41)
என அகத்திணையியலுட்
கூறியனவென்றுமாம். தலைவன் முன்னர் இல்லையெனவே
அவன் முன்னர் அல்லாதவிடத்துப் புகழ்தல் பெற்றாம்.
அவை
காமக்கிழத்தியரும் அவர்க்குப் பாங்காயினாருங் கேட்பப் புகழ்தலாம்.
உ-ம்:
“பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினும்
என்னொடு புரையுந ளல்லள்
தன்னொடு புரையுநர்த் தானறி குநளே.”
எனப் பதிற்றுப்பத்தில் வந்தது. (39)
தலைவன் தன்னைப் புகழுிமிட மிதுவெனல்
கிழவோன் வினைவயின் உரிய என்ப.
இது,
தலைவன் தன்னைப் புகழ்ந்துரைக்கும்
இடம் இன்னுழி
என்கின்றது.
(இ-ள்.)
கிழவி முன்னர்க் கிழவோன் தற்புகழ் கிளவி -
தலைவி
முன்னர்த் தலைவன் தன்னை

