தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3647


றார்.  கூட்டமின்றியும் நீங்காதிருத்தலிற் பரத்தையிற்  பிரிந்தானெனத்
தலைவி  நெஞ்சத்துக்கொண்ட  வருத்தம்  அகலும். அகல வாய்க்குங்
கரு   மாட்சிமைப்படுமாயிற்று.   இது   மகப்பேற்றுக் காலத்திற்குரிய
நிலைமை  கூறிற்று.  இதனாற்  பரத்தையிற் பிரியுநாள் ஒரு திங்களிற்
பதினைந்தென்றாராயிற்று.   உதாரணம்  வந்துழிக்  காண்க. “குக்கூ”
(குறுந்.157) என்பதனைக் காட்டுவாருமுளர்.                   (46)

ஓதற்பிரிவிற்குக் காலவரையறை யிதுவெனல்
 

188. 
வேண்டிய கல்வி யாண்டுமூன்றிறவாது.
 

இஃது   ‘ஓதலுந் தூதும்’ (தொல்.அகத்.26) என்னுஞ் சூத்திரத்திற்
கூறிய ஓதற்பிரிவிற்குக் காலவரையறை யின்றென்பதூஉம் அவ்வோத்து
இதுவென்பதூஉம் உணர்த்துகின்றது.

(இ-ள்.)     கல்வி வேண்டிய யாண்டு இறவாது - துறவறத்தினைக்
கூறும்  வேதாந்த  முதலிய  கல்வி  வேண்டிய யாண்டைக் கடவாது ;
மூன்று  இறவாது  -  அக்கல்வியெல்லாம்  மூன்றுபதத்தைக்  கடவாது
எ-று.

இறவாதென்பதை     இரண்டிடத்துங்  கூட்டுக. மூன்று பதமாவன
அதுவென்றும் நீயென்றும் ஆனாயென்றுங் கூறும் பதங்களாம். அவை
பரமுஞ்  சீவனும்  அவ்விரண்டும்  ஒன்றாதலும். ஆதலின் இம்மூன்று
பதத்தின்  கண்ணே  தத்துவங்களைக்  கடந்த பொருளை உணர்த்தும்
ஆகமங்களெல்லாம்   விரியுமாறு   உணர்ந்துகொள்க.   இது  மூன்று
வருணத்தார்க்குங்  கூறினார்.  ஏனைய வேளாளரும் ஆகமங்களானும்
அப்பொருளைக் கூறிய தமிழானும்  உணர்தல் ‘உயர்ந்தோர்க் குரிய’
(தொல்.அகத்.31)  என்பதனான் உணர்க. இஃது இல்லறம் நிகழ்த்தினார்
துறவறம்   நிகழ்த்துங்  கருத்தினராக  வேண்டுதலின்  காலவரையறை
கூறாராயினார். முன்னர்க் காட்டிய “அரம்போ ழவ்வளை” (அகம்.125)
என்னும்  பாட்டினுட் ‘பானாட் கங்குலின் முனிய வலைத்தி - கடவுள்
சான்ற   செய்வினை  மருங்கிற்  -  சென்றோர்  வல்வரின்  ஓடுவை’
என்றது,   இராப்பொழுது   அகலாது   நீட்டித்ததற்கு  ஆற்றாளாய்க்
கூறினாளென்று
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:11:53(இந்திய நேரம்)