தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3734


ஓதிய    அகத்திணைக்குச்    சிறப்பிலக்கணம்   ஏனை  ஓத்துக்களாற்
கூறுப.
  

ஒத்த  அன்பான் ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த
பேரின்பம்,      அக்கூட்டத்தின்       பின்னர்      அவ்விருவரும்
ஒருவருக்கொருவர்    தத்தமக்குப்    புலனாக   இவ்வாறிருந்ததெனக்
கூறப்படாததாய்,     யாண்டும்    உள்ளத்    துணர்வே    நுகர்ந்து
இன்பமுறுவதொரு  பொருளாதலின்  அதனை அகம் என்றார். எனவே
அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயராம்;
  

இதனை  ஒழிந்தன,  ஒத்த  அன்புடையார்தாமே யன்றி எல்லாார்க்குந்
துய்த்துணரப்  படுதலானும்,  இவை  இவ்வாறிருந்த வெனப் பிறர்க்குக்
கூறப்படுதலானும்,   அவை  புறமெனவே  படும்.  இன்பமே  யன்றித்
துன்பமும்  அகத்தே  நிகழுமாலெனின், அதுவும் காமங் கண்ணிற்றேல்
இன்பத்துள்  அடங்கும்.  ஒழிந்த துன்பம் புறத்தார்க்குப் புலனாகாமை
மறைக்கப்படாமையிற்      புறத்திணைப்      பாலதாம்.      காமம்
நிலையின்மையான் வருந் துன்பமுந் ‘தாபதநிலை’ ‘தபுதாரநிலை’ யென
வேறாம்.   திணையாவது   ஒழுக்கம்;  இயல்:  இலக்கணம்;  எனவே,
அகத்திணையியலென்றது        இன்பமாகிய        ஒழுக்கத்தினது
இலக்கணமென்றவாறாயிற்று.     இவ்வோத்துக்கள்    ஒன்றற்கொன்று
இயைபுடைமை அவ்வவ்வோத்துக்களுட் கூறுதும்.
  

இனி,  இச் சூத்திரம்   என்னுதலிற்றோ  வெனிற்  கூறக்  கருதிய
பொருளெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.
  

இதன் பொருள்: கைக்கிளை  முதலா - கைக்கிளை யெனப் பட்ட
ஒழுக்கம் முதலாக; பெருந்திணை  இறுவாய் - பெருந்திணை யென்னும்
ஒழுக்கத்தினை   இறுதியாகவுடைய   ஏழனையும்;  முற்படக்  கிளந்த
எழுதிணை  என்ப  -  முற்படக்  கூறப்பட்ட அகத்திணை யேழென்று
கூறுவர் ஆசிரியர் எ-று.
  

எனவே,        பிற்படக்       கூறப்பட்ட       புறத்திணையும்
ஏழுளவென்றவாறாயிற்று.   எனவே,   இப்பதினான்கு  மல்லது  வேறு
பொருளின் றென வரையறுத்தா ராயிற்று. அகப்புறமும் அவை தம்முட்
பகுதியாயிற்று. முதலும் ஈறும்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:28:31(இந்திய நேரம்)