தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3775


ன    இருப்பையும்  ஓமையும்  உழிஞையும் ஞெமையும்; புள், கழுகும்
பருந்தும்  புறாவும்;  பறை,  சூறைகோட்பறையும் நிரை கோட்பறையும்;
செய்தி,  ஆறலைத்தலுஞ்  சூறைகோடலும்;  யாழ்,  பாலையாழ். பிறவு
மென்றதனான்;     பூ,    மராவுங்    குராவும்    பாதிரியும்;    நீர்,
அறுநீர்க்கூவலுஞ்சுனையும்; ஊர், பறந்தலை.

இன்னும்  ‘பிறவு’  மென்றதனானே  இக் கூறியவற்றிற்குரிய மக்கள்
பெயருந் தலைமக்கள் பெயருங் கொள்க.  ‘அவை பெயரும் வினையும்’
(20)   என்னுஞ்   சூத்திரத்துட்   காட்டுதும்.   பிறவு   மென்றதனாற்
கொள்வன, சிறுபான்மை திரிவுபடுதலிற், பிறவு மென்று அடக்கினார்.

ஒருநிலக் கருப்பொருள் ஒழிந்த நிலத்து மயங்குதல்
 

19.
எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்.
 

இது முற்கூறிய கருப்பொருட்குப் புறனடை.

(இ-ள்)     எந்நில   மருங்கிற்   பூவும்     புள்ளும்-எழுதிணை
நிகழ்ச்சியவாகிய   நால்வகை   நிலத்தும்   பயின்ற  பூவும்  புள்ளும்;
அந்நிலம்
பொழுதொடு வாரா  ஆயினும்-தத்தமக்கு உரியவாகக் கூறிய
நிலத்தொடுங் காலத்தொடும் நடவாமற் பிற நிலத்தொடுங் காலத்தொடும்
நடப்பினும்;   வந்த   நிலத்தின்  பயத்த   ஆகும்  -  அவை  வந்த
நிலத்திற்குக் கருப்பொருளாம் எ-று.

ஓடு     ‘அதனோடியைந்த ஒருவினைக் கிளவி (சொ.75) யாதலின்
உடன்சேறல்  பெரும்பான்மையாயிற்று. ‘வினைசெய் யிடத்தி னிலத்திற்
காலத்தின்’   (சொ.83)   என்பதனான்   நிலத்தின்  பயத்தவாமெனப்
பொழுதினையும்   நிலமென்று   அடக்கினார்.   பூவைக்   கருவென
ஓதிற்றிலரேனும்   முற்கூறிய   மரத்திற்குச்  சினையாய்  அடங்கிற்று.
ஒன்றென  முடித்தலான்  நீர்ப்பூ  முதலியனவும் அடங்கும். இங்ஙனம்
வருமிடஞ் செய்யுளிடமாயிற்று.

உ-ம்:

‘‘தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
தேனிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்’’
    (கலி.52)

இது மருதத்துப்பூ, குறிஞ்சிக்கண் வந்தது.

‘‘உடையிவ ளுயிர்வாழா ணீநீப்பி னெனப்பல
விடைகொண்டியா மிரப்பவு மெமகொள்ளா யாயினை
கடைஇய வாற்றிடை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:36:25(இந்திய நேரம்)