தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3789


வேந்தர்     அவர்க்காகச்    சிறுபான்மை    சேறலும்    உணர்க.
முடியுடைவேந்தர்     உள்வழிக்     குறுநில     மன்னர்   தாமே
செல்லாமையுணர்க.   இதனை   ‘‘வேந்தர்க்குற்றுழி’’   (இறை.   கள.
38)யென்ப   ஏனையார்.  அவ்வேந்தர்  இல்வழிக்  குறுநிலமன்னருந்
தாமே  சேறல்  ‘‘வேந்துவினை  யியற்கை’’  (32) என்பதன்கட் கூறுப.
இதனானே   தன்பகைமேலும்   பிறர்பகை   மேலும்   ஒருகாலத்திற்
சேறலின்றென்றார்.

‘‘கடும்புனல் கால்பட்டு’’ என்னும் பாலைக்கலியுள்,

‘‘மயங்கமர் மாறட்டு மண்வௌவி வருபவர்
தயங்கிய களிற்றின்மேற் றகைகாண விடுவதோ.’’

                                       (கலி.31)

எனவும்,

‘‘பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்’’
                                       (கலி.31)

எனவும்   மண்கோடலுந்  திறைகேடாலும்  அரசர்க்கே   உரித்தாகக்
கூறியது.

‘‘நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே.’’         (கலி.31)

எனச் சுரிதகத்துக் கூறியவாற்றா னுணர்க.

‘‘பொருபெரு வேந்தர்க்குப் போர்ப்புணை யாகி
யொருபெருங் காதலர் சென்றார் - வருவது
காணிய வம்மோ கனங்குழை கண்ணோக்கா
னீணகர் முன்றின்மே னின்று.’’

இது வேந்தர்க்குற்றுழி வேந்தன் பிரிந்தது.

‘‘கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட் டியானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல்வாய் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய விவட்கே’’
         (நற்.10)

இது  குறுநிலமன்னர்  போல்வார் சென்றமை  தோன்றக்  கூறியது.
‘‘மலைமிசைக் குலைஇய’’ (அகம்.84) என்பதும் அது.

இனி   வேட்கைமேற் சேறலும் நாடுகாணச் சேறன் முதலி யனவும்
பாலையாகப்  புலனெறி வழக்கஞ் செய்யாமை உணர்க. வேந்தனென்று
ஒருமையாற்  கூறினார்.   ‘‘மெய்ந்நிலை   மயக்கி   னாஅ  குநவும்’’
(சொல்.449)  என்னும் விதிபற்றி ‘சிவணிய’ வென்பதனை வினையெச்ச
மாக்கி நட்பாடல் வேண்டியென்றுமாம்.                       (27)

ஏனைப்பிரிவு இவையெனல்
 

28.
மேவிய சிறப்பி னேனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையாற்
பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே.
 

இது முறையா
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:39:06(இந்திய நேரம்)