Primary tabs

ன
ளதாஅன்று மயிலென
மகிழ்....................’’
இது சுட்டி ஒருவர் பெயர் கொண்ட கைக்கிளை.
இஃது
ஆசுரமாகலின், முன்னைய
மூன்றுங் கைக்கிளை
யென்றதனாற் கோடும். ‘‘யாமத்து
மெல்லையும்’’ (நெய்தற்கலி.22)
என்றது சுட்டி ஒருவர்
பெயர்கொள்ளாப் பெருந்திணை.
‘‘பூண்டாழ் மார்பிற் பொருப்பிற் கோமான்
பாண்டியன் மடமகள் பணைமுலைச் சாந்தம்
வேறு தொடங்கிய விசய னெஞ்சத்
தாரழ லாற்றா தைஇ யோகியிற்
பொதியிற் சாந்த மெல்லாம் பொருதிரை
முத்தினு முழங்கழற் செந்தீப்
பொத்துவது போலும் புலம்புமுந் துறத்தே.’’
இது சுட்டி ஒருவர் பெயர்கொண்ட பெருந்திணை.
இவை
சான்றோர் செய்யுளுட்
பெருவரவிற்றன்மையினன்றே
முற்சூத்திரத்து
முன்னும் பின்னும் இவற்றை வைத்த தென்பது.
‘‘முட்காற் காரை
முதுகனி யேய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கட் டார
நிறுத்த வாயந் தலைச்செல வுண்டு
பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த
வெச்சி லீர்ங்கை விற்புறந் திமிரிப்
புலம்புக் கனனே புல்லணற் காளை
யொருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை
யூர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்குந்
தொடுத லோம்புமதி முதுகட் சாடி
யாதரக் கழுமிய துகளன்
காய்தலு முண்டக் கள்வெய் யோனே.’’ (புறம்.258)
இது வெட்சித்திணை பெயர் கொள்ளாது வந்தது.
‘‘முலைபொழி
தீம்பான் மண்சேறு படுப்ப
மலர்தலை யுலக மோம்பு மென்ப
பாசிலைத் தொண்டைப் பல்லவ னாணையின்
வெட்சித் தாயத்து வில்லே ருழவர்
பொருந்தா வடுகர் முனைச்சுரங்
கடந்து கொண்ட பல்லா னிரையே.’’
இது
வேந்துவிடு தொழிற்கண் வேந்தனைப்
பெயர் கூறிற்று.
ஒழிந்தனவும்
புறத்திணையியலுட் காண்க. (54)
இயற்பெயர்
புறத்திணையொடு பொருந்தி அகத்திணைக்கண்ணும்
வருதல்
55.
புறத்திணை மருங்கிற்
பொருந்தின் அல்லது
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே.
இது
புறத்திணக்குத் தலைவர்
ஒருவராதலும், பலராதலும்
உரிப்பொருட்குத்
தலைவர் பலராகாமையுங் கூறலின்,
எய்தாத
தெய்துவித்து எய்தியது விலக்கிற்று.
(இ-ள்.) அகத்திணை மருங்கிற் பொருந்தின் - ஒருவனையும்
ஒருத்தியையும் விதந்து கூறும் இயற்பெயர் அகத்திணைக்கண்ணே
வந்து பொருந்துமாயின்; புறத்தி

