Primary tabs

ளவைத் தாவதா மண்’’
இவை விரிச்சியை வியந்தன.
புடைகெடப்
போகிய செலவே - நிரைகோடற்கு
எழுந்தோர்
ஆண்டுநின்று மீண்டுபோய்ப் பற்றார் புலத்து ஒற்றர் உணராமற்
பிற்றை ஞான்று சேறலும்,
நிரைமீட்டற்கு எழுந்தோர் ஆண்டு
ஒற்றப்படாமற் சேறலும்;
உ-ம்:
‘‘பிறர்புல
மென்னார் தமர்புல மென்னார்
விறல்வெய்யோ ராயிருட்கட் சென்றார் - நிரையுங்
கடாஅஞ் செருக்குங் கடுங்களி யானைப்
படாஅ முகம்படுத் தாங்கு’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1240.நிரைகோடல்.9)
‘‘கங்கை
பரந்தாங்குக் கானப் பெருங்கவலை
யெங்கு மறவ ரிரைத்தெழுந்தார்-தங்கிளைக்கண்
மன்றுகாண் வேட்கை மடிசுரப்பவேதோன்றும்
கன்றுகாண் மெய்குளிர்ப்பீர் கண்டு.’’
(புறத்திரட்டு.1246)
இவை கண்டோர் கூற்று.
புடைகெட
ஒற்றின் ஆசிய வேயே - நுரைகோடற்கு
எழுந்தோர்
பகைப்புலத்து ஒற்றர்
உணராமற் சென்று ஒற்றி
அவ்வொற்று
வகையான் அவர் உணர்த்திய
குறளைச் சொல்லும், நிரைமீட்டற்கு
எழுந்தோர்
அங்ஙனம் ஒற்றிய ஒற்றுவகையான் வந்து ஓதிய
குறளைச்
சொல்லும்;
உ-ம்:
‘‘ஒருவ ரொருவ
ருணராமற் சென்றாங்
கிருவரு மொப்ப விசைந்தார் - வெருவர
வீக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு
கோக்குஞ் சரந்தெரிந்து கொண்டு.’’
‘‘நெடுநிலை
யாயத்து நிரைசுவ டொற்றிப்
படுமணி யாயம் பகர்ந்தோய் - நெடிது
மனக்குரிய காதல் வயவேந்த னென்று
நினக்குரிய வாக நிரை.’’
இவை கண்டோர் கூற்று.
வேய்ப்புறம்
முற்றின் ஆகிய புறத்திறை -
நிரைகோடற்கு
எழுந்தோர் வேயுரைத்
தோரிடத்துச் செய்யுஞ்
சிறப்புகள்
முடிந்தபின்னர் உளதாகிய
நிரைப்புறத்து ஒடுங்கிய
இருக்கைப்
பகுதியும், நிரைமீட்டற்கு
எழுந்தோர் தமது நிரைப்புறத்துச் சென்று
விரைவொழிந்து இருக்கின்ற
இருக்கையும்;
உ-ம்:
‘‘கரந்தியல்
காட்டுத்தீப் போலப் பெரிதும்
பரந்துசென் மள்ளர் பதிந்தா - ரரந்தை
விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி
யெரிந்தவியும் போலுமிவ் வூர்.’’
இது கண்டோர் கூற்று.
‘‘இருநில மருங்கி
னெப்பிறப் பாயினு
மருவின் மாலையோ வினிதே யிரவி
னாகோண் மள்ளரு மருள்வரக் கானத்து
நாம்புறத் திறுத்தென மாகத் தாந்தங்
கன்றுகுரல் கேட்டன போல
நின்றுசெவி யோர்த்தனசென்றுபடு நிரையே.’’
(தகடூர் யாத்திரை,
புறத்திரட்டு.1251.நிரைமீட்சி)
இது மறவர் கூற்று.
முற்றிய
ஊர்கொலை. நிரைகோடற்கு
எழுந்தோர் அவர்
புறஞ்சேரியை
வளைத்துக்கொண்டு ஆண்டுநின்ற நிரைகாவலரைக்
கொன்று பகை

