தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3896


ட்டினுள் அவ்வாறாதல் கண்டுகொள்க.  

இனித்  தலைவரேயன்றிப் பிறரும் அவ்வாறு பொரினும் அதன்பாற்
படுத்துக.
  

உடைபடை ஒருவன் புக்கு  ஒருவனைக் கூழைதாங்கிய எருமையும்-
தனது  உடைந்த   படைக்கண்ணே  ஒரு   படைத்தலைவன் சென்று
நின்று   அங்ஙனங்  கெடுத்த  மாற்று  வேந்தன்  படைத்தலைவனை
அவன்  எதிர்கொண்டுநின்ற பின்னணியோடே தாங்கின கடாப்போலச்
சிறக்கணித்து நிற்கு நிலைமைக்கண்ணும்;
  

ஒருவ னொருவனைத் தாங்கின எருமையென முடிக்க.  

உ-ம்:  

‘‘சீற்றங் கனற்றச் சிறக்கணித்துச் செல்லுங்கால்
வேற்றெருமை போன்றா னிகல்வெய்யோன் - மாற்றான்
படைவரவு காத்துத்தன் பல்படையைப் பின்காத்

திடைவருங்காற் பின்வருவார் யார்’’

என வரும்.  

படையறுத்துப்   பாழிகொள்ளும் ஏமத்தானும் - கைப் படையைப்
போக்கி மெய்யாற் போர்ச்செய்யும் மயக்கத்தின் கண்ணும். பாழி, வலி;
இஃது ஆகுபெயர்.
  

உ-ம்:  

‘‘கொல்லேறு பாய்ந்தழிந்த கோடுபோற் றண்டிறுத்து
மல்லேறு தோள்வீமன் மாமனைப் - புல்லிக்கொண்
டாறாத போர்மலைந்தான் ஆங்கரசர் கண்டார்த்தா
ரேறாட லாய ரென’’                      
(பாரதம்)

என்னும் பாரதப்பாட்டுக் கொள்க. 

‘‘நீலக் கச்சைப் பூந்துவ ராடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வருங் களிற்றொடு வேறுரந் தினியே
தன்னுந் துரக்குவன் போலு மொன்னல
ரெஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
கையின் வாங்கித் தழீஇ
மொய்ம்பி னூக்கி மெய்க்கொண் டனனே’’
     (புறம்.274)

என்பதும் அது.  

களிறெறிந்  தெதிர்ந்தோர் பாடும் - மாற்றுவேந்தன் ஊர்ந்து வந்த
களிற்றைக்  கையெறிந்தானுங்   கடுக்கொண்டெதிர்ந்தானும்   விலக்கி
அவனையும் அக்களிற்றையும் போர்செய்தோர் பெருமைக்கண்ணும்;
  

உ-ம்:  

‘‘இடியா னிருண்முகிலு மேறுண்ணு மென்னும்
படியாற் பகடொன்று மீட்டு - வடிவே
லெறிந்தார்த்தார் மள்ள ரிமையாத கண்கொண்
டறிந்தார்த்தார் வானோரு மாங்கு.’’

என வரும்.  

‘‘வானவர் போரிற் றானவர்க் கடந்த
மான வேந்தன் யானை

   

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 03:59:45(இந்திய நேரம்)