தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3917


க்கங்களைக்        குறிக்கொண்டு     ஐம்பொறியினையும்  வென்று
தடுத்தலாம்.     அவை     இல்லறத்திற்கு     உரியவாக    நான்கு
வருணத்தார்க்குங்   கூறிய   அடக்கமுடைமை,   ஒழுக்க  முடைமை,
நடவுநிலைமை,   பிறர்மனைநயவாமை ,   வெஃகாமை,  புறங்கூறாமை,
தீவினையச்சம், அழுக்காறாமை, பொறையுடைமை முதலியனவாம்.
  

உ-ம்:  

‘‘ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து’’             
(குறள்.126)

‘‘ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
முயிரினு மோம்பப் படும்’’                 
(குறள்.131)

‘‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி’’
                                      
(குறள்.118)
  

‘‘பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு’’
          (குறள்.148)

‘‘படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்’’                  
(குறள்.172)

  

‘‘அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறான் என்ற லினிது‘‘                
(குறள்.181)

  

‘‘தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு’’              
(குறள்.201)

‘‘ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சுத்
தழுக்கா றிலாத வியல்பு’’                  
(குறள்.161)

‘‘மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்’’                
(குறள்.158)

பிறவும் இந்நிகரனவெல்லாங் கொள்க.

‘‘விழையா வுள்ளம் விழையு மாயினுங்
என்றுங், கேட்டவை தோட்டி யாக மீட்டாங்
கறனும் பொருளும் வழாமை நாடித்
தற்றக வுடைமை நோக்கி மற்றதன்
பின்னா கும்மே முன்னியது முடித்தல்
இனைய பெரியோ ரொழுக்க மதனா
லரிய பெரியோர்த் தேருங் காலை’’      
(அகம்.286:8.13)

என இது தொகுத்துக் கூறியது. 

இடையில்   வண்புகழ்க் கொடைமையானும -  இடையீ  டில்லாத
வண்புகழைப் பயக்குங் கொடைமையானும்;
  

உலகமுழுதும்    பிறர்புகழ் வாராமைத்    தன்புகழ்   பரத்தலின்
‘இடையி’லென்றார்.
 

வண்புகழ்   - வள்ளிதாகிய புகழ்; அது வளனுடையதென விரியும்.
இக்கொடைப்  புகழுடையான் மூப்புப் பிணி சாக்காட்டுக்கு அஞ்சாமை
யின் அது வாகையாம்.
 

உ-ம்:

‘‘மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே
துன்னருஞ் சிறப்பி னுயர்ந்த செல்வ
ரின்மையி னிரப்போர்க் கீஇ யாமையிற்
றொன்மை மாக்களிற் றொடர்பறி யலரே
தாடாழ் படுமணி யிரட்டும் பூநுத
லாடியல் யானை பாடுநர்க் கருகாக்
கேடி னல்லிசை வயமான் றோன்றலைப்
பாடி நின்றனெ னாகக் கொன்னே
பாடுபெ
   

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 04:03:49(இந்திய நேரம்)