Primary tabs

ந்திய குதிரைக் கூர்வேற்
கூவிளங் கண்ணிக் கொடும்பூ ணெழினியும்
ஈர்ந்தண் சிலம்பி னிருடூங்கு நளிமுழை
யருந்திறற் கடவுள் காக்க முயர்சிமைப்
பெருங்க னாடன் பேகனுந் திருந்துமொழி
மோசி பாடிய ஆயு மார்வமுற்
றுள்ளி வருந ருலைவுநனி தீரத்
தள்ளா தீயுந் தகைசால் வண்மைக்
கொள்ளா ரோட்டிய நள்ளியு மெனவாங்கு
எழுவர் மாய்ந்த பின்றை யழிவரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
யிரந்தோ ரற்றந் தீர்க்கென விரைந்திவண்
உள்ளி வந்தனென் யானே விசும்புறக்
கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி
யாசினிக் கவினிய பலவி னார்வுற்று
முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரு
மதிரா யாணர் முதிரத்துக் கிழவ
இவண்விளங்கு சிறப்பி னியல்தேர்க் குமண
இசைமேந் தோன்றிய வண்மையொடு
பகைமேம் படுகநீ யேந்திய வேலே’’
(புறம்.158)
இஃது இன்னோர் போல எமக்கு ஈ யென்ற இயன்மொழி வாழ்த்து.
‘‘இன்று செலினுந் தருமே சிறுவரை
நின்று செலினுந் தருமே பின்னும்
முன்னே தந்தனெ னென்னாது துன்னி
வைகலுஞ் செலினும் பொய்யல னாகி
யாம்வேண்டி யாங்கெம் வறுங்கல நிறைப்போன்
தான்வேண்டி யாங்குத் தன்னிறை யுவப்ப
வருந்தொழின் முடியரோ திருந்துவேற் கொற்ற
னினமலி கதச்சேக் களனொடு வேண்டினுங்
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
அருங்கலங் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
பிறர்க்கு மன்ன வறத்தகை யன்னே
யன்ன னாகலி னெந்தை யுள்ளடி
முள்ளு நோவ வுறாற்க தில்ல
ஈவோ ரரியவிவ் வுலகத்து
வாழ்வோர் வாழஅவன் றாள்வா ழியவே’’
(புறம்.171)
இது படர்க்கையாகிய இயன்மொழி வாழ்த்து.
‘‘இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிகன் ஆயலன் பிறருஞ்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப்பட் டன்றவன் கைவண் மையே’’
(புறம்.134)
இது பிறருஞ்
சான்றோர் சென்ற நெறி யென்றமையின்
அயலோரையும் அடுத்தூர்ந்தேத்தியது. இன்னும்
வேறுபட
வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக.
சேய்வரல்
வருத்தம் வீட வாயில் காவலற்கு உரைத்த
கடைநிலையானும் - சான்றோர் சேணிடை வருதலாற் பிறந்த வருத்தந்
தீர வாயில் காக்கின்றவனுக்கு என் வரவினை இசையெனக் கூறிக்
கடைக்கணின்ற கடைநிலையும்;
இது
வாயிலோனுக்குக் கூறிற்றேனும் அவ்வருத்தந் தீர்க்கும்
பாடாண்தலைவனதே துறையென்பது பெற்றாம்.
இழிந்தோரெல்லாந்
தத்தம் இயங்களை இயக்கிக் கடைக் கணிற்றல்
‘பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்’ (தொல். பொரு. புறத்.36)

