Primary tabs

ணியவாறுங் கூறியவாறு காண்க.
குடுமிகொண்ட மண்ணுமங்கலம்
எயிலழித்தல் கூறாமையின்
இதனின் வேறாயிற்று.
பரிசில்
கடைஇய நிலையும் - பரிசிலரை நீக்குதலமையாது நெடிது
கொண்டு
ஒழுகிய தலைவற்குப் பரிசில் வேட்டோன் தன் கடும்பினது
இடும்பை முதலியன கூறித் தான் குறித்த பொருண்மையினைச்
செலுத்திக் கடாவின நிலையும்;
கடைக்கூட்டு
நிலையும் - வாயிலிடத்தே நின்று தான் தொடங்கிய
கருமத்தினை முடிக்கும் நிலையும்;
இதுவும்
இழிந்தோர் கூற்றாயிற்று; இருத்தலே அன்றிக் கடாவுதலின்.
‘நிலை’ யென்றதனானே பரிசில்பெறப் போகல் வேண்டுமென்னுங்
குறிப்பும் பரிசினிலையும் பல்வகையாற் கூறுதல் கொள்க.
உ-ம்:
‘‘ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பி
னாம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்
பாஅ லின்மையின் தோலொடு திரங்கி
யில்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொ றழுஉந்தன் மகக்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென்
மனையோ ளெவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண
என்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைத்
தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணார் முழவின் வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே’’
(புறம்.164)
இது பரிசில் கடாநிலை.
‘‘மதியேர் வெண்குடை யதியர் கோமான்
கொடும்பூ ணெழினி நெடுங்கடை நின்றியான்
பசலை நிலவின் பனிபடு விடியற்
பொருகளிற் றடிவழி யன்ன வென்கை
யொருகண் மாக்கிணை யொற்றுபு கொடாஅ
வுருகெழு மன்ன ராரெயில் கடந்து
நிணம்படு குருதிப் பெரும்பாட் டீரத்
தணங்குடை மரபி னிருங்களந் தோறும்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி
வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும்
வைக லுழவ வாழிய பெரிதெனச்
சென்றியா னின்றனெ னாக வன்றே
யூருண் கேணிப் பகட்டிலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை
நுண்ணூற் கலிங்க முடீஇ யுண்மெனத்
தேள்கடுப் பன்ன நாட்படு தேறல்
கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ
யூண்முறை யீத்த லன்றியுங் கோண்முறை
விருந்திறை நல்கி யோனே யந்தரத்
தரும்பெற லமிழ்த மன்ன
கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே’’ (புறம். 392)
இது கடைநிலை.
‘‘நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்பா டெருவைப் பசுந்தடி தடுப்பப்

