Primary tabs

கரு உரிப்பொருள் என்ற மூன்றே-முதலுங் கருவும் உரிப் பொருளும்
என்ற மூன்றேயாம்; நுவலுங் காலை முறை சிறந்தனவே - அவைதாம்
செய்யுள் செய்யுங்கால் ஒன்று ஒன்றினிற் சிறந்து வருதலுடைய எ-று.
இங்ஙனம்
பாடலுட் பயின்ற பொருள் மூன்றெனவே, இம் மூன்றும்
புறத்திணைக்கும் உரியவென்பது பெறுதும். அது புறத்திணைச்
சூத்திரங்களுள்,
‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே’ (56) என்பன
முதலியவற்றாற் கூறுப.
முதலிற் கருவும், கருவின் உரிப்பொருளுஞ் சிறந்துவரும். இம்
மூன்றும் பாடலுட் ‘பயின்று’ வருமெனவே வழக்கினுள் வேறுவேறு
வருவன அன்றி ஒருங்கு நிகழாவென்பதூஉம்,‘நாடுங் காலை’ யெனவே
புலனெறிவழக்கிற் பயின்றவாற்றான் இம்மூன்றனையும் வரையறுத்துக்
கூறுவதன்றி வாக்குநோக்கி இலக்கணங் கூறப்படாதென்பதூஉம்
பெறுதும், ‘நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்’ (தொல்.
பாயிரம்) என்று புகுந்தமையிற் பொருளும் அவ்விரண்டனானும்
ஆராய்தல் வேண்டுதலின்.
இஃது இல்லதெனப்படாது,
உலகியலேயாம். உலகியலின்றேல்,
ஆகாயப்பூ நாறிற்றென்றுழி அது சூடக் கருதுவாருமின்றி மயங்கக்
கூறினானென்று உலகம் இழித்திடப்படுதலின் இதுவும் இழித்திடப்படும்.
இச்செய்யுள் வழக்கினை நாடக வழக்கென மேற்கூறினார்,
எவ்விடத்தும் எக்காலத்தும் ஒப்ப நிகழும் உலகியல் போலாது,
உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தல் முதலாகப் புனைந்துரை
வகையான் கூறும் நாடகஇலக்கணம் போல யாதானுமொரோவழி ஒரு
சாரார்மாட்டு உலகியலான் நிகழும் ஒழுக்கத்தினை எல்லார்க்கும்
பொதுவாக்கி இடமுங் காலமும் நியமித்துச் செய்யுட் செய்த ஒப்புமை
நோக்கி. மற்று இல்லோன் தலைவனாக இல்லது புணர்க்கும் நாடக
வழக்