தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4895


தூங்கித்    துளி  மிகுதலிற் சேறல் அரிதாதலானும், பானாட் கங்குலிற்
பரந்துடன்   வழங்காது   மாவும்  புள்ளுங்  துணையுடன்  இன்புற்று
வதிதலிற்  காமக்குறிப்புக்  கழியவே  பெருகுதலானுங்,  காவன் மிகுதி
நோக்காது  வருந் தலைவனைக் குறிக்கண் எதிர்ப்பட்டுப் புணருங்கால்
இன்பம்      பெருகுதலின்,      இந்நிலத்திற்குக்      கூதிர்காலஞ்
சிறந்ததெனப்படும்.

உ-ம்:

‘‘விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப
வேந்தனும் வெம்பகை தணிந்தனன் றீம்பெயற்
காரு மார்கலி தலையின்று தேரும்
ஓவத் தன்ன கோபச் செந்நிலம்
வள்வாய் ஆழி உள்ளுறு புருளக்
கடவுக காண்குவம் பாக மதவுடைத்
தாம்பசை குழவி வீங்குசுரை மடியக்
கனையலங் குரல காற்பரி பயிற்றிப்
படுமணி மிடற்ற பயநிரை யாயங்
கொடுமடி யுடையர் கோற்கைக் கோவலர்
கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க
மணமனைப் படரும் நனைநகு மாயுலைத்
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப்
புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்
நீர்குடி சுவையிற் றீவிய மிழற்றி
முகிழ்நிலாத் திகழ்தரு மூவாத் திங்கள்
பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி
வருகுவை யாயின் தருகுவென் பாலென
விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித்
திதலை யல்குலெங் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.’’  (அகம். 54)

இது பாகற்குரைத்தது. இது முல்லைக்கட் காரும் மாலையும் வந்தது.

‘‘மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே
கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே
யாமங் கொளவரிற் கனைஇக் காமங்
கடலினு முரைஇக் கரைபொழி யும்மே
யெவன்கொல் வாழி தோழி மயங்கி
இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக்
கிறும்புபட் டிருளிய இட்ட ருஞ்சிலம்பிற்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்
கானக நாட
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:10:49(இந்திய நேரம்)