தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4908


ன்   புறத்துப்போன   அத்துணைக்கு   ஆற்றாயாகுதல்  தகாதென்ற
பாணற்குத் தலைவி கூறியது.

இப் பத்தும் நெய்தற்கண் மருதம்.

‘‘வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
மிதிப்ப நக்க கண்போ னெய்தல்
கட்கமழ்ந் தானாத் துறைவற்கு
நெக்க நெஞ்ச நேர்கல் லேனே.’’         (ஐங்குறு. 151)

இது  வாயில்  வேண்டிய  தோழிக்குத் தலைவி வாயின் மறுத்தது.
இப்பத்தும் நெய்தற்கண் மருதம்.

‘‘இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி
முகம்புதை கதுப்பின ளிறைஞ்சிநின் றோளே
புலம்புகொண் மாலை மறைய
நலங்கே ழாக நல்குவ ளெனக்கே.’’        (ஐங்குறு.197)

இடந்தலைப்பாட்டிற்  றலைவி  நிலைகண்டு  கூறியது. இது நெய்தலிற்
புணர்த னிமித்தம்.

‘‘வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன்
தண்ணக மண்ணளை நிறைய நெல்லி
னிரும்பூ வுறைக்கு மூரற்கிவள்
பெருங்கவி னிழப்ப தெவன்கொ லன்னாய்’’ (ஐங்குறு.30)

இது தோழி அறத்தொடு நின்றது.

‘‘பழனக் கம்புள் பயிர்ப்பெடை யகவுங்
கழனி யூரநின் மொழிவ லென்றுந்
துஞ்சுமனை நெடுநகர் வருதி
யஞ்சா யோவிவ டந்தைகை வேலே.’’      (ஐங்குறு.60)

இது தோழி இரவுக்குறி மறுத்தது.

‘‘நெறிமருப் பெருமை நீலஇரும் போத்து
வெறிமலர்ப் பொய்கை யாம்பன் மயக்குங்
கழனி யூரன் மகளிவள்
பழன வெதிரின் கொடிப்பிணை யலளே.’’    (ஐங்குறு.91)

இஃது இளையள் விளைவில ளென்றது.

‘‘கருங்கோட் டெருமைச் செங்கட் புனிற்றாக்
காதற் குழவிக் கூறுமுலை மடுக்கு
நுந்தை நும்மூர் வருது
மொண்டொடி மடந்தை நின்னையாம் பெறினே’’
                                    (ஐங்குறு.92)

இது  நின்  தமர்  வாராமையின்  எமர்  வரைவு நேர்ந்தில  ரென்று
தோழி கூறக் கேட்ட தலைவன் தலைவிக்குக் கூறியது.

இவை மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தன.

இக் காட்டியவெல்லாம் ஐங்குறுநூறு. ‘‘புனையிழை  நோக்கியும்’’
என்னும் மருதக் கலியும்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:13:20(இந்திய நேரம்)