தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4935


னர்   நின்ற   திணைநிலைப்  பெயராதற்குச்  சிறந்தார்  அறுவகைய
ரெனப் பகுக்கின்றது.

(இ-ள்) மரபின்-வேதநூலுட்கூறிய இலக்கணத்தானே; ஏவல் ஆகிய
நிலைமையவரும்  -  பிறரை ஏவிக்கொள்ளுந் தொழில் தமக்குளதாகிய
தன்மையையுடைய   அந்தணர்  அரசர்  வணிகரும்; அன்னர் ஆகிய
அவரும்   -   அம்மூவரையும்   போற்   பிறரை   ஏவிக்கொள்ளுந்
தன்மையராகிய   குறுநிலமன்னரும்  அரசராற்  சிறப்புப்பெற்றோரும்;
ஏனோரும்   -  நால்வகை  வருணமென்று  எண்ணிய  வகையினான்
ஒழிந்து  நின்ற  வேளாளரும்; உரியர் - உரிப்பொருட் டலைவராதற்கு
உரியர் எ-று.

ஆகிய என்பதனை ஏவலொடும் அன்னரொடுங் கூட்டுக.

எனவே,     திணைநிலைப்பெயர்   அறுவகையாயிற்று.  ‘வேந்து
விடுதொழிலிற்....பொருளே  (637)  என்பதனான் வேளாளரே அரசராற்
சிறப்புச்      செய்யப்பெறுவரென்றுணர்க.      இனி      ‘வில்லும்
வேலுங்கழலு....முரிய’  (639)  என்பதனான்  ஏனோருஞ்  சிறுபான்மை
சிறப்புப்    பெறுவரென்றுணர்க.   உரிப்பொருட்டலைவர்  இவரேயா
தலைத்தாம் மேற்பிரிவிற்குக் கூறுகின்றவாற்றானும் உணர்க.

‘‘தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம்
அணங்கென வஞ்சுவர் சிறுகுடி யோரே;
ஈர்ந்த ணாடையை யெல்லி மாலையை’’        (கலி.52)

என வரும்.

‘‘முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாக
ரினிதெனக் கணவ னுண்டலி
னுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.’’
                                     (குறுந்.167)

இது    குறுந்தொகை.    இது   பார்ப்பானையும்   பார்ப்பனியையுந்
தலைவராகக் கூறியது. கடிமனை சென்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:18:36(இந்திய நேரம்)