Primary tabs

வந்துபொருந்திய தலைமையானே; பிழைத்தது - முன்னர் ‘ஆள்பவர்
கலக்குறுத்த அலைபெற்று’ நெறிமுறைமை தப்பிய அந்நாடு; முறையாற்
பிழையாதாகல் வேண்டியும் பிரிவே - தன்னுடைய பழைய நாடுகளை
ஆளும் நெறிமுறைமையினானே தப்பாமல் ஆக்கம் பெறக் காத்தலை
விரும்பிப் பிரிதலும் பிரிவே; ஏனோர் படிமைய இழைத்த
ஒண்பொருள் முடியவும் பிரிவே-முற்கூறிய அந்தணர் அரசரை ஒழிந்த
வணிகர் தமக்கு விரதங்களுடையவாக வேதநூலிற் கூறிய ஒள்ளிய
பொருள் தேடி முடியும்படி பிரிதலும் பிரிவே எ-று.
பிரிவை
இரண்டற்குங் கூட்டுக. சிறப்பிற் பிரிதலும் எனச் சேர்க்க.
சொல்லியவென்பதும் பிழைத்ததென்பதும் தொழிற்பெயர். முறையாற்
காக்கவென முடிக்க. விரதமானவை ‘கொள்வதூஉம் மிகைகொளாது.
கொடுப்பதூஉம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசல்’-
(பட்டினப்.209:11) முதலியன.
உ-ம்:
‘‘ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்
பருதியஞ் செல்வன்போ னனையூழ்த்த செருந்தியு
மீனேற்றுக் கொடியோன்போன் மிஞிறார்க்குங் காஞ்சியு
மேனோன்போ னிறங்கிளர்பு கஞலிய ஞாழலு
மானேற்றுக் கொடியோன்போ லெதிரிய விலவமும்
ஆங்கத்
தீதுதீர் சிறப்பி னைவர்க ணிலைபோலப்
போதவிழ் மரத்தொடு பொருகரை கவின்பெற
நோதக வந்தன்றா லிளவேனின் மேதக;
பல்வரி யின வண்டு புதிதுண்ணும் பருவத்துத்
தொல்கவின் றொலைந்தவென் றடமென்றோ ளுள்ளுவா
ரொல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி
வெல்புக ழுலகேத்த விருந்துநாட் டுறைபவர்;
திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை
வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார்
நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம்
மிசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்;
அறல்சாஅய் பொழுதோடெம் மணிநுதல் வேறாகித்
திறல்சான்ற பெருவனப் பிழப்பதை யருளுவா
ரூறஞ்சி நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி

