Primary tabs

கூறினார். அஃது ஏமம் இல் இருக்கை யன்றாதலின். (37)
மனைஅயற் பிரதலும் பிரிவுள் அடங்குமெனல்
இதுவும் பாலைக்கு ஒரு வேறுபாடு கூறுகின்றது.
(இ-ள்.)
அயலோர் ஆயினும். முற்கூறிய சேரியினுஞ் சுரத்தினு
மன்றித் தம் மனைக்கு அயலே பிரிந்தாராயினும்; அகற்சிமேற்று.
அதுவும் பிரிவின்கண்ணதாம் எ-று.
எனவே
நற்றாய் தலைவியைத் தேர்ந்து இல்லிற்
கூறுவனவுஞ்
சேரியிற் கூறுவனவும் பிரிந்தாரைப் பின் சென்றதேயாயிற்று. இக்
கருத்தான் ‘ஏமப்பேரூர்’ என்றார். இதனானே மனையயற்கட்
பரத்தையிற் பிரிவும் பாலையென்று உய்த்துணர்க.
(38)
உடன்போக்கின்கண் தோழி கூற்றுக்கள் நிகழுமாறு
போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்
நீக்கலின் வந்த தம்முறு விழுமமும்
வாய்மையும் பொய்மையுங் கண்டோர்ச் சுட்டித்
தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்
நோய்மிகப் பெருகித்தன் னெஞ்சுகலுழ் தோளை
யழிந்தது களைஇய வொழிந்தது கூறி
வன்புறை நெருங்கி வந்ததன் றிறத்தோடு
என்றிவை யெல்லா மியல்புற நாடின்
ஒன்றித் தோன்றுந் தோழி மேன.
இது தாயர்க்கு
உரியன கூறி, தோழிக்குக் கூற்று நிகழுமாறு
கூறுகின்றது.
(இ-ள்.)
தலைவரும் விழுமநிலை எடுத்து உரைப்பினும்- தலைவன்
கொண்டுதலைக்கழியாவிடிற் றலைவிகண் தோன்றுந் துன்பநிலையைத்
தலைவற்குந் தலைவிக்கும் விளங்கக் கூறினும்; பேர்க்கற்கண்ணும் -
அது கேட்டு இருவரும் போகற்கொருப்பட்டுழித் தலைவியைப்
போகவிடும் இடத்தும்; விடுத்தற்கண்ணும் - தலைவியை அவனொடு
கூட்டி விடுக்குங்காற் றலைவற்குப் பாதுகாவலாகக் கூறும் இடத்தும்;
நீக்கலின் வந்த தம் உறு விழுமமும் - தாயரை நீக்குதலான் தமக்குற்ற
வருத்தத்திடத்தும்; வாய்மையும் பொய்மையும் கண்டோர்ச் சுட்டித்
தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும் - மெய்யும்
பொய்யும் உணர்ந்த அறிவரது தரும நூற்றணிபும் இதுவெனக் கூறிப்
பின் சென்று அவரை மீட்டற்கு நினைந்த தாயது நிலைமை அறிந்து
அவரை மீளாதபடி அவளை மீட்டுக்

