தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4973


தாறிய கொள்கை
யன்னை முன்னர்யாம் என்னிதற் படலே.’’
     (அகம்.95)

இது போக்குடன்பட்டமை தலைவி தோழிக் குரைத்தது. அகம்.

‘‘அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே யினியே
வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை
தீம்புன னெரிதர வீந்துக் காங்குத்
தாங்கு மளவை தாங்கிக்
காம நெரிதரக் கைநில் லாதே.’’ 
            (குறுந்.149)

இக் குறுந்தொகை நாண் நீங்கினமை கூறியது.

‘‘சிலரும் பலருங் கடைக்க ணோக்கி
மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகிற் பெண்டி ரம்ப றூற்றச்
சிறுகோல் வலத்த ளன்னை யலைப்ப
வலந்தனென் வாழி தோழி கானற்
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற்
கடுமான் பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனொடு
செலவயர்ந் திசினால் யானே
யலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே.’’
       (நற்.149)

இந் நற்றிணை அலர் அச்சம் நீங்கினமை கூறியது.

‘‘சேட்புல முன்னிய வசைநடை யந்தணிர்
நும்மொன் றிரந்தனென் மொழிவ லெம்மூர்த்
தாய்நயந் தெடுத்த வாய்நலங் கவின்பெற
வாரிடை யிறந்தன ளென்மி
னேரிறை முன்கையென் னாயத் தோர்க்கே.’’
(ஐங்குறு.384)

இவ்  வைங்குறுநூறு  ‘யான்  போகின்றமை  ஆயத்திற்கு  உரைமின்’
என்றது

‘‘கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக்
கோள்வல் வேங்கைய மலை பிறக் கொழிய
வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக்
கூறுமின் வாழியோ வாறுசென் மாக்க
ணற்றோ ணயந்துபா ராட்டி
யெற்கெடுத் திருந்த வறனில் யாய்க்கே.’’  
  (ஐங்குறு.385)

இவ்    வைங்குறுநூறு   இன்று   யான்   தேரேறி   வருத்தமின்றிப்
போகின்றமை யாய்க்கு உரைமின் என்றது.

‘‘கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியுஞ்
சுரநனி வாரா நின்றன ளென்பது
முன்னுற விரைந்தனி ருரைமி
னின்னகை முறுவலெம் மாயத் தோர்க்கே.’’
(ஐங்குறு.397)

இவ்  வைங்குறுநூறு  மீள்கின்றாளென்று என் வரவு ஆயத் தார்க்குக்
கூறுமின் என்றது.

‘‘வேய்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:25:58(இந்திய நேரம்)