தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5001


மக்களும்     மாவும் முதலியன சென்று நீருண்ணுந்துறைபோலப்
பலவகைப்பட்ட     பொருளும்    ஒருவகைப்பட்டு    இயங்குதலாகு
மார்க்கமாதலிற்  றுறையென்றார்.  எல்லாவழியு மென்பதனை எல்லாத்
துறையுங்   காவல்போற்றினார்  என்பவாகலின்.  எனவே,  திணையுந்
துறையுங்     கொண்டாராயிற்று.     அகத்திணைக்குத்     துறையுட்
பகுதிகளெல்லாம்  விரித்துக்கூறிப் பின்னும் பன்முறையாற் பரந்துபட்டு
வரம்பிகந்தனவற்றையுந்  தொகுத்துத்  துறைப்படுத்துக்  கிளவி  கூறுக
என்றற்குச்  செய்யுளியலுள்  துறை  யென்பது (பொ. 521) உறுப்பாகக்
கூறினார்.   புறத்திணைக்கு   அங்ஙனம்   பரந்துபட  விரித்தோதாது
தொகுத்து   இலக்கணஞ்   செய்தாராயினும்   அவையும்  அவ்வாறே
பலபொருட்பகுதியும்  உடையவென்பது உணர்த்துதற்குத் துறையெனப்
பெயராகக்  கொடுத்தார். இதனானே அகப்பொருட் பகுதி பலவாயினும்
ஒரு     செய்யுளுட்     பலபொருள்     விராஅய்வரினும்,     ஒரு
துறையாயினாற்போலப்  புறத்திணைக்கும்  அவ்வப் பொருட் பகுதியும்
ஒரு  துறையாதலும்,  ஒரு  செய்யுளுட் பலதுறை ஒருங்குவந்தும் ஒரு
துறைப்படுதலுங்கொள்க.    இன்னும்   இதனானே   அகத்திணைக்கு
உரியனவெல்லாம் புறத்திணைக்குங் கொள்க.

வெட்சித் திணையின் பொதுவிலக்கணம்
 

57.
வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற் றாகும்.
 

இது வெட்சியெனக்  கூறிய  புறத்திணைக்குப்  பொது  இலக்கணங்
கூறுகின்றது.

(இ-ள்.)  வேந்து  விடு  முனைஞர்  -  வேந்தனால்  விடப்பட்டு
முனைப்புலங்  காத்திருந்த  தண்டத் தலைவர்; வேற்றுப் புலக்களவின்
-பகைநிலத்தே சென்று களவினானே; ஆ தந்தோம்பல் மேவற்றாகும்-
ஆநிரையைக்       கொண்டு       போந்து      பாதுகாத்தலைப்
பொருந்துதலையுடைத்தாகும் வெட்சித்திணை எ-று.

களவுநிகழ்கின்ற     குறிஞ்சிப்பொருளாகிய       கந்தருவமணம்
வேத விதியானே இல்லறமாயினாற்போ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:31:25(இந்திய நேரம்)